இடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வாக் காளர்களுக்கு குத்து விளக்குகளை விநியோகம் செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்காளர்களை கவர அரசியல் கட்சியினர் பணம், பரிசுப் பொருட்களை விநியோகம் செய்கின்றனரா? என்பதை தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது.
அன்பளிப்பு கொடுப்பவர்களை பிடிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கொருக்குப் பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 42-வது வார்டு திருநாவுக் கரசு தோட்டத்தில் உள்ளவர்களுக்கு பெண் ஒருவர் வாக்காளர்களுக்கு குத்துவிளக்கு களை அன்பளிப்பாக கொடுப்பதாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகளும் கொருக்குப் பேட்டை போலீஸாரும் நேற்று முன்தினம் இரவு சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்தனர். குத்து விளக்குகளை வாக்காளர்களுக்கு விநியோகித்துக் கொண்டிருந்த பெண்ணை சுற்றி வளைத்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிடிபட்டது அதே பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகரான நளினி என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோன்று வாக்காளர் களுக்கு குத்து விளக்கு கொடுத்த தாக சில தினங்களுக்கு முன்னர் 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.