தமிழகம்

அரசு பஸ் மோதியதில் 9 வாகனம் சேதம், 5 பேர் காயம்

செய்திப்பிரிவு

தாம்பரம் ஜிஎஸ்டி சாலை சிக் னலில் மாநகர பஸ் மோதியதில் 9 வாகனங்கள் சேதமடைந்தன. இதில் 5 பேர் காயமடைந் தனர்.

தாம்பரத்தில் இருந்து பிராட் வேக்கு நேற்று காலை 9.15 மணிக்கு மாநகர பஸ் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பஸ்ஸை ஓட்டுநர் பார்த்தசாரதி (36) ஓட்டி னார். பஸ் ஜிஎஸ்டி சாலை காந்தி ரோடு சந்திப்பு அருகே சிக்னலுக் காக நிற்க முயன்றபோது பிரேக் பிடிக்காததால் சிக்னலில் நின் றிருந்த வாகனங்கள் மீது மோதியது.

இதில் 6 பைக் , 1 கார், 2 மினி வேன் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் பைக்கில் சிக்னலில் நின்றிருந்த சதிஷ் (27), முரளி (26), அசோக்(32), சங்கர்(44), மணிகண்டன்(36) ஆகியோர் காயம் அடைந்தனர். விபத்து காரணமான ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முதியவர் பலி

சேலையூர் கேம்ப்ரோடு சிக்னல் அருகே தாம்பரத்தில் இருந்து அகரம் நோக்கி சென்ற மாநகர பஸ் மோதியதில் சாலையை கடக்க முயன்ற சேலையூர் பாலாஜி நகரைச் சேர்ந்த கணபதி (60) என் பவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT