தமிழக சட்டப்பேரவை நேற்று முன்தினம் கூடியது. ஜூலை 19-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடை பெற உள்ளது. முதல் நாளிலேயே திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் கூவத்தூரில் தங்கவைக்கப்பட் டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் பணம் பெற்றதாக கூறப்படும் வீடியோ குறித்து கேள்வி எழுப்பினர். இதனால் சட்டப்பேரவையில் பரபரப்பு எற்பட்டது.
இரண்டாவது நாளாக நேற்றும் இதே விவகாரம் குறித்து சட்டப் பேரவையில் கேள்வி எழுப்பப்பட் டது. எந்நேரமும் இந்த விவகாரம் பெரிதாகலாம் என உளவுப் பிரிவு போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ள னர். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பைப் பலப் படுத்த தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி (பொறுப்பு) டி.கே ராஜேந் திரன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அனைத்து மாவட்ட போலீஸாரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஏற்கெனவே போலீஸார் பற்றாக் குறையாக உள்ளதால் அனைத்து போலீஸாரும் சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடியும்வரை விடுமுறை எடுக்காமல் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தவிர்க்க முடியாத காரணங் களுக்கு விடுமுறை அளிக்கிறோம். மற்றபடி அனைத்து காவலர் களும் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.