தமிழகம்

மாநில உரிமை, சமூக நீதி, மதச்சார்பின்மையை பாதுகாக்க ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தொடக்கம்: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவிப்பு

செய்திப்பிரிவு

மாநில உரிமை, சமூக நீதி, மதச்சார்பின்மை ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளை ஒன்றிணைத்து ‘ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு’ என்ற புதிய அமைப்பை திராவிடர் கழகம் தொடங்கியுள்ளது.

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று நடந்தது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக் கரசர், திமுக துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, இந்திய கம்யூனிஸ்ட் தேசியக் குழு உறுப்பினர் தா.பாண்டியன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமாகா துணைத் தலைவர் இஎஸ்எஸ் ராமன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் முகமது யூசுப், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் விளக்கினார். கூட்டமைப்பை கி.வீரமணி அறிவித்தார்.

தமுமுக தலைவர் பி.எஸ்.ஹமீது, எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் தெகலான் பாகவி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் நா.பெரியசாமி, முன் னாள் எம்பி பெ.விஸ்வநாதன் உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT