தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருக்கும் நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்" என பதிவு செய்திருக்கிறார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானத்தை கொண்டுவருகிறார். பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே தமிழகத்தில் அதிமுக ஆட்சி தப்பிப்பிழைக்கும்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், ""எண்ணம் இருந்தும் ஆண்டவரால் காப்பாற்ற முடியவில்லை எண்ணிக்கை இருந்ததால் ஆளுநரால் காப்பாற்ற முடியவில்லை. தமிழகத்தை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்" என தெரிவித்திருக்கிறார்.