தமிழக பட்ஜெட் 2017 - 2018 சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார்.
தமிழக பட்ஜெட்: அரசியல் தலைவர்கள் கருத்து
* பிரச்சினைகளுக்கு தீர்வு காணாதது மட்டுமல்ல, நிவாரணம் கூட அளிக்காத மிக மோசமான நிதிநிலை அறிக்கை என்று பட்ஜெட் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். அதன் விவரம்: >பிரச்சினைகளுக்கு நிவாரணம் கூட அளிக்காத மோசமான பட்ஜெட்: ஜி.ராமகிருஷ்ணன் கருத்து
* புதிய அறிவிப்பு இல்லாத, கடன்சுமையை அதிகரித்த வெற்று பட்ஜெட் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதன் விவரம்: >கடன்சுமையை அதிகரித்த வெற்று பட்ஜெட்: ராமதாஸ்
* ஒரு மிகப்பெரிய கடனாளியாக இருக்கும் சாதனையை அதிமுக ஆட்சி படைத்திருக்கிறது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதன் விவரம்: >தமிழகத்தை கடனாளியாக்குவதுதான் அதிமுகவின் சாதனை: ஸ்டாலின் பேட்டி
* நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தல் என்ற மரபுவழி சடங்கு நிறைவேறியுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பட்ஜெட் குறித்து கருத்து கூறியுள்ளார். அதன் விவரம்: >பட்ஜெட் மரபுவழி சடங்காக நிறைவேறியுள்ளது: முத்தரசன்>
* கடுமையான நெருக்கடிகள் மிகுந்த சூழலில், சவால்கள் நிறைந்த நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தாக்கல் செய்திருக்கிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். அதன் விவரம்: >சவால்கள் நிறைந்த பட்ஜெட்: வைகோ கருத்து
* சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் பொது மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் உள்ளது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். அதன் விவரம்: >ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்: வாசன் கருத்து
*புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படாத வரவு-செலவுத் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். அதன் விவரம்: >புதிய வரிகள் இல்லா பட்ஜெட்: பழ.நெடுமாறன் வரவேற்பு
நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்து, வெளியிட்ட அறிவிப்புகளின் சில முக்கிய அம்சங்கள்:
1.25 PM: பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 20 முதல் 24 வரை நடைபெறும்; 24-ம் தேதி நிதியமைச்சர் பதிலுரை இடம்பெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
1.15 PM: தமிழக பட்ஜெட்டை வாசித்து முடித்தார் நிதியமைச்சர் ஜெயக்குமார். தமிழக சட்டப்பேரவை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
1.12 PM: ஜிஎஸ்டி முறை அமலுக்கு வர உள்ளதால், வரிச்சலுகைகள் எதுவும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை: அமைச்சர் ஜெயக்குமார்
1.10 PM: 1 லட்சம் பெண்கள் மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் ஜெயக்குமார்
1.05 PM: உதய் திட்டத்தில் தமிழகம் இணைந்ததால் ரூ.1,335 கோடி சேமிப்பு ஏற்படும்: அமைச்சர் ஜெயக்குமார்
உதய் திட்டத்தில் தமிழகம் இணைந்ததால் ரூ.1335 கோடி சேமிப்பு ஏற்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்த நிதி ஒதுக்கீடு சார்பான சில விவரங்கள்:
* விவசாயம் மற்றும் இதர பயன்பாட்டுக்கான மின்சார மானியத்திற்கு ரூ.8,538 கோடி ஒதுக்கீடு
* ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாடு திட்டத்திற்கு ரூ.3,100 கோடி, சாலை பாதுகாப்புக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
* கிராம கோயில்களை புதுப்பிக்கும் திட்டத்தில் கோயில்களின் எண்ணிக்கை 500லிருந்து 1000 ஆக உயர்வு
* கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரை சுரங்க வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பயணிகள் சேவை தொடங்கப்படும் > அதன் விவரம்: >சென்னையில் புதிதாக 3 மெட்ரோ ரயில் தடங்கள்: பட்ஜெட்டில் அறிவிப்பு
* சுற்றுலாத்துறையில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.403 கோடி ஒதுக்கீடு
* தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.116 கோடி ஒதுக்கீடு
* முதலீடு ஊக்குவிப்பு திட்டத்திற்கு ரூ.1,295 கோடி ஒதுக்கீடு
* உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு
* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு ரூ.532 கோடி ஒதுக்கீடு
* சுகாதாரத்துறைக்கு ரூ.10,158 கோடி ஒதுக்கீடு. அதன் விவரம்: >சுகாதாரத்துறைக்கு ரூ.10,158 கோடி ஒதுக்கீடு
1.00 PM: வரும் நிதியாண்டில் 100 லட்சம் டன் உணவு தானிய உற்பத்தி செய்ய இலக்கு: அமைச்சர் ஜெயக்குமார்
2017-18 நிதியாண்டில் தூய்மை இந்தியா இயக்கத்தின் (ஊரகம்) கீழ், 24 லட்சம் வீட்டு கழிவறைகளும், 50 சமூக சுகாதார வளாகங்களும் கட்டப்படும் என்று அமைச்ச ர்ஜெயக்குமார் தெரிவித்தார். அதன் விவரம்: >கிராமப்புறங்களில் 24 லட்சம் வீட்டு கழிவறைகள் கட்டப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு
கால்நடைத் துறை, மீன்வளத் துறை உள்ளிட்ட சில துறைகள் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த பட்ஜெட்டின் சில முக்கிய அம்சங்கள்:
* நீதி நிர்வாகத்திற்கு ரூ.984 கோடி, நீதிமன்ற ஆவணங்களை கணினிமயமாக்க ரூ.37 கோடி ஒதுக்கீடு
* 10 புதிய வட்டாட்சியர் அலுவலகங்கள், 5 கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்ட ரூ.42.16 கோடி ஒதுக்கீடு
* வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்க 590 கூடுதல் மையங்கள் அமைக்கப்படும்
* வரும் நிதியாண்டில் 100 லட்சம் டன் உணவு தானிய உற்பத்தி செய்ய இலக்கு
* தலா 100 விவசாயிகளை கொண்ட புதிய 1000 உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களை தொடங்க திட்டம்> இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு
* 6 லட்சம் விலையில்லா ஆடுகள் வழங்க ரூ.182 கோடி ஒதுக்கீடு. ஏழை பெண்களுக்கு 25 ஆயிரம் கறவை பசுக்கள் வழங்கப்படும். நாட்டு மரபின மாடுகளை பாதுகாக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு
* 25 கால்நடை மருந்தகங்களை, கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்த திட்டம்
* மதுரையில் ரூ.40 கோடி செலவில் பால் பதப்படுத்தும் நிலையம் புதியதாக தொடங்கப்படும் > இதன் விவரம்: >மதுரையில் ரூ.40 கோடி செலவில் பால் பதப்படுத்தும் ஆலை: பட்ஜெட்டில் அறிவிப்பு
* எண்ணூர், காசிமேடு உட்பட 7 மீன்பிடி துறைமுகங்கள் ரூ.1105 கோடி செலவில் மேம்படுத்தப்படும்
* கடல் அரிப்பில் இருந்து மீனவர்களை பாதுகாக்க ரூ.20 கோடியில் திட்டம்.
* ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் ரூ.113 கோடி செலவில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்
* நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய டீசல் ஆண்டுக்கு 3000 லிட்டரில் இருந்து 3400 லிட்டராக வழங்கப்படும்
* விசைப்படகு மீனவர்களுக்கு மானிய டீசல் ஆண்டுக்கு 12,000 லிட்டரில் இருந்து 18,000 லிட்டராக வழங்கப்படும்
* இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்த 18 மீனவ படகுகளுக்கு தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு
* மீனவர்களின் நிவாரண உதவித்தொகை ரூ.2700-லிருந்து, ரூ.4500 ஆக உயர்வு
* மீன்வளத்துறைக்கு ரூ.860 கோடி ஒதுக்கீடு > அதன் விவரம்: >ரூ.85 கோடி செலவில் மீனவர்களுக்கு 5000 வீடுகள்; மீன்வள துறைக்கு ரூ.768 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் அறிவிப்பு
* நீர்வள, நிலவள திட்டம் ரூ.3,042 கோடியில் செயல்படுத்தப்படும்...
12.52 PM: ஜவ்வாது மலையில் 2 உண்டு உறைவிட மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
12.50 PM: ரூ.1,508 கோடி செலவில் நான்கு வழிச்சாலைகள் தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்
12.45 PM: பிரதம மந்திரி கிராமப்புற சாலைத் திட்டத்திற்கு ரூ. 758 கோடி ஒதுக்கீடு
மருத்துவ கல்விக்கான பட்டமேற்படிப்பு இடங்கள் 1,188 லிருந்து 1,362 உயர்த்தப்பட்டுள்ளது.அதன் விவரம்: >மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள் 1,362 ஆக உயர்வு: பட்ஜெட்டில் அறிவிப்பு
பிரதம மந்திரி கிராமப்புற சாலைத் திட்டத்திற்கு ரூ. 758 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மென்பொருள் ஏற்றுமதி ரூ.1,00,300 கோடியை எட்டும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள இணைப்புச் சாலைகளை, நான்குவழி அல்லது ஆறுவழிச் சாலைகளாகவும் மேம்படுத்துவதற்கு முதற்கட்டமாக 232.20 கோடி ரூபாய்க்கான பணிகள் 2017-2018 ஆம் ஆண்டில் முதற்கட்டமாக மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்தார். அதன் விவரம்> >சென்னை, புறநகர் சாலை மேம்பாடு முதற்கட்ட பணிகளுக்கு ரூ.232 கோடி ஒதுக்கீடு
திறன்மிகு நகரங்கள் திட்டத்துக்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்கு ரூ. 490 கோடி நிதி ஒதுக்கீடும், அட்டல் நகர்ப்புற புத்துணர்வு திட்டத்துக்கு ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
12.40 PM: 1000 கிராமப்புற கோயில்களை புதுப்பிக்க தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும், தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.116 கோடி நிதி ஒதுக்கீடு, சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறைக்கு ரூ.342.22 கோடி ஒதுக்கீடு, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்த 18 மீனவ படகுகளுக்கு தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு, கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி ரூ.875லிருந்து ரூ.1000 ஆக உயர்வு, காங்கேயம், பர்கூர் உள்ளிட்ட நாட்டுமாடுகளை பாதுகாக்க அரசு நிதி உதவி வழங்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
12.35 PM: ஈரோடு, பூதலூர், நெகமத்தில் ரூ. 22 கோடியில் தென்னை நார் கயிறு குழுமங்கள் அமைக்கப்படும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 50 சமூக சுகாதார வளாகங்கள் கட்டப்படும். வறட்சியை சமாளிக்க புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும்.
தருமபுரியில் உணவுப்பொருள் குழுமம் அமைக்கப்படும். ராமேஸ்வரத்தில் கடல் உணவுப்பொருள் குழுமம் அமைக்கப்படும். ஸ்ரீபெரும்புதூரில் மின்னணு பொருள் உற்பத்தி மையம் ஏற்படுத்தப்படும். காஞ்சிபுரம், கரூர் மாவட்டத்தில் தலா ஒரு ஜவுளி குழுமம் அமைக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
12.25 PM: போக்குவரத்து துறைக்கு மொத்தம் ரூ.2,192 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுவிநியோக திட்டம் - உணவு மானியத்திற்கு ரூ.5,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
12.15 PM: முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.582.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.130 கோடியில் 330 ஏக்கரில் மருத்துவ பூங்கா அமைக்கப்படும்.
சென்னை, புறநகர் சாலைத் திட்டங்களுக்கு ரூ.744 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
12.05 PM: பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.26,932 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. > அதன் விவரம்: பட்ஜெட்: >பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.26,932 கோடி ஒதுக்கீடு
உயர் கல்வித்துறைக்கு ரூ.3680 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் 200 புதிய ஆவின் பாலகங்கள் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். > அதன் விவரம்: >பட்ஜெட்டில் உயர் கல்வித்துறைக்கு ரூ.3,680 கோடி ஒதுக்கீடு
2017 - 2018 நிதியாண்டில் 150 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்தார். >அதன் விவரம்: >150 நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்: அமைச்சர்
11.55 AM: அத்திக்கடவு-அவினாசி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும், 100 நாள் வேலை உறுதித் திட்டத்துக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
11.45 AM: தமிழ்நாடு உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும், பல துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதன் விவரம்: >தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு
* ஊரக வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.469 கோடி ஒதுக்கீடு
* நகர்ப்புற வறுமை ஒழிப்புக்கு ரூ.272 கோடி ஒதுக்கீடு
* தமிழ் வளர்ச்சிக்கு ரூ.48 கோடி ஒதுக்கீடு > அதன் விவரம்: >பட்ஜெட்டில் தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.48 கோடி ஒதுக்கீடு
* கோடையில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க ரூ.615 கோடி செலவிடப்படும்> அதன் விவரம்: >சென்னை குடிநீர் தேவைக்காக 10 இடங்களில் போர்வெல்: பட்ஜெட்டில் அறிவிப்பு
* வார்தா புயல் மறுசீரமைப்பு பணிக்காக ரூ.585 கோடி செலவு
* சமச்சீர் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.282.22 கோடி ஒதுக்கீடு
* காவல்துறைக்கு ரூ.6,483 கோடி ஒதுக்கீடு
* தீயணைப்புத்துறைக்கு ரூ.253 கோடி ஒதுக்கீடு
* சிறைத்துறைக்கு ரூ.282 கோடி நிதி ஒதுக்கீடு
11.40 AM: தமிழக அரசு மின் உற்பத்தியிலும் மின் விநியோகத்திலும் தன்னிறைவு அடைந்துள்ளதாக நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். அதன் விவரம்: >மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு: அமைச்சர் தகவல்
11.35 AM: வேளாண் துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட 6 துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை நிதி அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார்.
* வேளாண் துறைக்கு ரூ.1680.73 கோடி நிதி ஒதுக்கீடு
* மீன்வளத்துறைக்கு ரூ.768 கோடி நிதி ஒதுக்கீடு
* தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.1,010 கோடி நிதி ஒதுக்கீடு
* ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ.3,009 கோடி நிதி ஒதுக்கீடு
* நீர் வளத்துறைக்கு ரூ.4,791 கோடி நிதி ஒதுக்கீடு
* பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.988 கோடி நிதி ஒதுக்கீடு
11.30 AM: 3.5 லட்சம் ஏழை எளிய குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். >அதன் விரம்: >3.50 லட்சம் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க இலக்கு
11.25 AM: நடப்பு நிதியாண்டுக்கான மொத்த பட்ஜெட் மதிப்பு 1.59 லட்சம் கோடி என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
11.20 AM: ரூ.150 கோடி செலவில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி: அமைச்சர் ஜெயக்குமார்
கோவை, திருச்சி, மதுரையில் ரூ.150 கோடி செலவில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி வழங்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். >அதன் விவரம் >ரூ.150 கோடி செலவில் இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி
11.15 AM: உள்ளாட்சித் தேர்தல் நடத்த ரூ.174 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு. அதன் விவரம்: >உள்ளாட்சித் தேர்தலுக்கு ரூ.174 கோடி ஒதுக்கீடு
11.12 AM: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா மருந்தகம், அம்மா காய்கறி அங்காடி போன்ற அனைத்து முன்னோடி திட்டங்களும் தொடர்ந்து செயல்படும் என அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். அதன் விவரம்: >'அம்மா உணவகம்' திட்டம் தொடரும்: அமைச்சர் ஜெயக்குமார்
11.10 AM: குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.615 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
நிதி ஒதுக்கீட்டின் 4 முக்கிய அம்சங்கள்:
* நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.13,996 கோடி ஒதுக்கீடு
* காவல்துறையினர் வீட்டு வசதிக்கு ரூ. 450 கோடி ஒதுக்கீடு:
* விவசாய பயிர்க் கடன்களுக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு
* மின்சாரம்- எரிசக்தித் துறைக்கு ரூ.16,998 கோடி ஒதுக்கீடு > அதன் விவரம்: >மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு: அமைச்சர் தகவல்
10.55 AM: நடப்பு நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9% ஆக இருக்கும் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
நிதி ஒதுக்கீட்டின் சில முக்கிய அம்சங்கள்:
* கால்நடை பராமரிப்பிற்கு ரூ.1,161 கோடி நிதி ஒதுக்கீடு
* திருமண உதவித் திட்டங்களுக்கு ரூ.723 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு
* விவசாய பயிர்க் கடன்களுக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு
* வருவாய் பற்றாக்குறை ரூ.15,931 கோடி என மதிப்பீடு
10.45 AM: தமிழகத்தில் ரூ.3,14,366 கோடி கடன் உள்ளது என்றும், 2017-18-ம் ஆண்டுக்கான நிதி பற்றாக்குறை ரூ. 41,977 கோடி என்றும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அதன் விவரம்: >தமிழகத்தின் தற்போதைய கடன் சுமை ரூ.3 லட்சம் கோடி
10.40 AM: நிதியமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.
10.39 AM: எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்குப் பிறகு சபாநாயகர் நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
10.36 AM: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசினார் அமைச்சர் ஜெயக்குமார். அதற்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, துணை பொதுச் செயலாளர் தினகரனுக்கு நன்றி தெரிவித்தார். அதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சசிகலா, தினகரனுக்கு நன்றி தெரிவித்ததை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். தண்டனை பெற்றவரைப் பற்றிப் பேசுவது முறையல்ல என்று ஸ்டாலின் பேசினார். >| சசிகலாவை வாழ்த்துவதா?- அவையில் திமுக கடும் எதிர்ப்பு |
தேர்தல் ஆணையம் பரிசீலனையில் இருப்பதால் பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளருக்கு நன்றி தெரிவித்தது தவறில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
10.34 AM: தமிழக சட்டப்பேரவையில் முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் ஜெயக்குமார்.
10.32 AM: திருக்குறளைப் படித்து பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி வைத்தார் சபாநாயகர் தனபால்.
10.30 AM: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.
10.20 AM: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை
10.03 AM: சட்டப்பேரவைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை
10.00 AM: சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வருகை. பேரவைக்குள் நுழைந்த போது பாதுகாப்பு அதிகாரிகளின் பெயரைக் கேட்ட ஸ்டாலின், அதை துண்டுச்சீட்டில் குறித்துக் கொண்டார்.
9.55 AM: முதல்வர் பழனிசாமி மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
9.45 AM: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை வருகை தந்தனர்.
சட்டப் பேரவைக்கு எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் வருகை தந்தபோது
9.15 AM: தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவை கிளம்பிய நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்றார். அங்கு நிதிநிலை அறிக்கை அடங்கிய பெட்டியை ஜெயலலிதாவின் சமாதியில் வைத்து வணங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடும் நிதி நெருக்கடியிலும் மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் பட்ஜெட் அமையும்'' என்றார்.
ஜெயலலிதா நினைவிடத்தில் அமைச்சர் டி. ஜெயக்குமார்: படம்- எல்.சீனிவாசன்.
பட்ஜெட் கூட்டத் தொடருக்காக தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. எடப்பாடி பழனிசாமி அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்கிறார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவிலும் ஆட்சியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. சசிகலாவின் தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியதால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களுக்கிடையே கடந்த பிப்ரவரி 16-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. அதன்பின் பிப்ரவரி 18-ல் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றது.
ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். புதிய அரசு பொறுப்பேற்றதும் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்தன. முதல்வரிடம் இருந்த நிதித்துறை, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. 2017-18-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், காலை 10.30 மணிக்கு பேரவையில் தாக்கல் செய்கிறார். இது எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் நிதியமைச்சர் ஜெயக்குமாருக்கும் முதல் பட்ஜெட் ஆகும்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். அதனடிப்படையில், இந்த அரசும் புதிய அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.