தமிழகம்

மு.க.தமிழரசு பிரச்சாரம்

செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் என்.மருதுகணேஷை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கருணாநிதி யின் இளைய மகன் மு.க.தமிழரசு நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

நேற்று காலை ராயபுரம் ஜீவரத்தினம் நகரில் வீடு, வீடாக அவர் பிரச்சாரம் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுகவினர் ஊர்வலமாகச் சென்றனர்.

கருணாநிதியின் இளைய மகன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அவர், ‘‘இந்த இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறாவிட்டால் தமிழகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.

தமிழகத்தின் எதிர்காலமே ஆர்.கே.நகர் மக்களிடம் தான் உள்ளது. எனவே, திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்’’ என அவர் வேண்டுகோள் விடுத்து வருகிறார். ஒரு தெருவில் 2 அல்லது 3 பேர்களுடனாவது அவர் தனிப்பட்ட முறையில் உரையாடுகிறார்.

சிலருடன் பேசும்போது, ‘‘ஆர்.கே.நகரிலேயே பிறந்த வளர்ந்து மக்களோடு மக்களாக இருக்கும் எளிய தொண்டர் ஒருவரை திமுக வேட்பாளராக நிறுத்தியுள்ளது. எனவே, அவரை வெற்றி பெறச் செய்யுங்கள்’’ எனக் கூறி அவர் வாக்கு சேகரித்து வருகிறார். ராயபு ரம், காசிமேடு பகுதிகளில் நேற்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

SCROLL FOR NEXT