ஆர்.கே.நகர் தொகுதியில் பணப் பட்டுவாடா செய்தவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுப்பது மட்டுமில்லாமல், சம்பந்தப்பட்ட வேட்பாளர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தால் பணப் பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை ஒப்புக்கொண்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இதற்கு தார்மிக பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களின் மீது வழக்கு பதிவு மட்டுமே செய்கிறார்கள். அதன்பிறகு எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதில்லை என்றார்.