தமிழகம்

புதுவை ஆளுநரின் வாட்ஸ்-அப் குரூப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய கூட்டுறவு பதிவாளர் இடைநீக்கம்

செய்திப்பிரிவு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உள்ள வாட்ஸ்-அப் குரூப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய கூட்டுறவு சங்க பதிவாளர் பணியிடைநீக்கம் செய் யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி, அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளும் விதமாக ‘வளமான கிராமப்புறம்’ என்ற பெயரில் வாட்ஸ்-அப் குரூப் ஒன்றை உரு வாக்கியுள்ளார். ஆளுநர் கிரண் பேடி நிர்வகித்து வரும் இந்த குரூப்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதி காரிகள், துறை செயலாளர்கள், காவல்துறை அதிகாரிகள் என அனைத்துத் துறை உயர் அதி காரிகளும் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த வாட்ஸ்-அப் குரூப்பில் நேற்று முன்தினம், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சிவக்குமாரின் எண்ணில் இருந்து ஒரு ஆபாச வீடியோ பதிவானதாகக் கூறப்படுகிறது. இதைக்கண்ட ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பதிவாளர் சிவக்குமாரை அழைத்து ஆளுநர் கிரண்பேடி விசாரணை நடத்தினார். அப்போது அவர், தவறுதலாக அந்த ஆபாச வீடியோ பதிவாகிவிட்டதாக கூறி மன்னிப்பு கேட்டார். ஆனால் ஆளுநர் கிரண்பேடி அதனை ஏற்க மறுத்ததுடன், பதிவாளர் சிவக் குமாரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

தொடர்ந்து டிஜிபி உத்தர வின் பேரில் சீனியர் எஸ்.பி., ராஜீவ்ரஞ்சன், நேற்று முன் தினம் இரவே சிவக்குமாரை விசார ணைக்காக அழைத்துச் சென்றார். அவர் மீது புதுச்சேரி குற்றம் மற்றும் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் நேற்று காலை இச்சம்பவம் புதுச்சேரி முழுவதும் காட்டுத்தீப்போல் பரவியது.

இதையறிந்த காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன், புதுச்சேரி பிற துறைகளை சேர்ந்த பி.சி.எஸ்., அதிகாரிகளாக பணியாற்றும் இயக்குநர்களும், தலைவர்களும் சிவக்குமாருக்கு ஆதரவாக உரு ளையன்பேட்டையில் உள்ள சீனியர் எஸ்.பி., அலுவலகத்துக்கு சென்று சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். அவரை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அப்போது, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜஹான் மற்றும் எம்எல்ஏக்கள் சீனியர் எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கிருந்த பதிவாளர் சிவக்குமாரை அழைத்துக்கொண்டு காவல்துறை தலைமை அலுவலகம் சென்றனர்.

காவல்துறை தலைமை அலு வலகத்தில் அமைச்சர்கள் மற்றும் பி.சி.எஸ்., அதிகாரிகள், காவல் துறை டிஜிபி சுனில்குமார் கவுதம், சீனியர் எஸ்.பி., ராஜீவ்ரஞ்சன் ஆகியோருடன் நீண்டநேரம் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரி சிவக்குமாரும் உடனிருந்தார். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை விடு வித்தனர்.

இந்த சம்பவத்தால் புதுச் சேரியின் பல்வேறு துறைகளிலும் பரபரப்பான சூழல் நிலவியது. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சிவக்குமார் பி.சி.எஸ்., (புதுச்சேரி குடிமையியல் பணி) அதிகாரி என்பதும், அவர் பல்வேறு துறை களில் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT