புதுச்சேரி வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை நேற்று, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியும், அவரது கட்சி எம்எல்ஏக்களும், அதிமுக புதுச் சேரி சட்டப்பேரவைக் குழுத் தலைவர் அன்பழகன் தலைமை யில் அக்கட்சி எம்எல்ஏக்களும் சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக் கான ஆதரவை உறுதிப்படுத்தினர்.
அமித்ஷா வருகையையொட்டி 'புதுச்சேரியின் வளர்ச்சி' என்ற நோக்கில் நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பேரணி பாரதியார் சிலையை வந்தடைந்தது. பின்னர் அமித்ஷா, மத்திய இணையமைச் சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகி யோர் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இதற்கிடையே என்.ஆர்.காங்கி ரஸ் தலைவர் ரங்கசாமி தலைமை யில் எம்பி ராதாகிருஷ்ணன், அக் கட்சி எம்எல்ஏக்களில் ஜெயபால், அசோக் ஆனந்த், சுகுமார், கோபிகா ஆகியோர் அமித்ஷாவை சந்தித்து. பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு தங்களது ஆத ரவை தெரிவித்தனர். மொத்த முள்ள 8 எம்எல்ஏக்களில், தற் போது காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக இருக்கும் செல்வம் உட்பட 3 எம்எல்ஏக்கள் அவருடன் செல்லவில்லை.
அதேபோல் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் தலை மையில் எம்பி கோகுலகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் பாஸ்கர், வையா புரி மணிகண்டன் ஆகியோர் அமித்ஷாவை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். காரைக் காலைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏ அசனா இதில் பங்கேற்கவில்லை.