காபந்து முதல்வராக ஒரு வாரத் துக்குப் பின் நேற்று ஓ.பன்னீர் செல்வம் தலைமைச் செயலகத் துக்கு வந்து, தலைமைச் செயலர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மறைவுக்குப் பின், டிசம்பர் 5-ம் தேதி தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற் றார். அவர், கடந்த பிப்ரவரி 5-ம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்தார். ஓ.பன்னீர்செல்வத் தின் ராஜினாமாவை பிப்ரவரி 6-ம் தேதி ஏற்றுக்கொண்ட ஆளுநர் வித்யாசாகர் ராவ், அடுத்த ஏற்பாடுகள் நடக்கும் வரை முதல்வராக தொடர ஓ.பன் னீர்செல்வத்தை கேட்டுக் கொண் டார். அதைத் தொடர்ந்து, ஒரு வாரத்துக்குப் பின் நேற்று தலைமைச் செயலகத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார்.
முதல்வர் வருகைக்கு முன்னதாக காலை 11 மணிக்கு தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில், உள்துறை செயலர் அபூர்வ வர்மா, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட் டம் நடந்தது. இக்கூட்டத்தில், தமிழகத்தில் தற்போதைய சட்டம்-ஒழுங்கு நிலை, எம்எல்ஏக்கள் தனியார் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்பட்டு வரும் அசாதாரண சூழல்களை எதிர்கொள்வது, அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் தடுப்பது, உள்ளூர் மக்கள் மற்றும் அதிமுகவினர் இடையில் மோதல் ஏற்படாமல் தடுப்பது போன்றவை குறித்தும் விவாதித்ததாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித் தன. ஒரு மணி நேர ஆலோ சனைக்குப் பின், அங்கிருந்து டிஜிபி உள்ளிட்டோர் புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலை வருமான மு.க.ஸ்டாலின் பகல் 12.05 மணிக்கு வந்தார். அவருடன் துரைமுருகன், நேரு, பொன்முடி, வேலு ஆகிய முன்னாள் அமைச்சர்களும் வந்திருந்தனர். எதிர்க்கட்சித்தலைவர் அறையில் அமர்ந்து ஆலோசனை நடத்திய அவர்கள் 12.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து, நேற்று பகல் 1.05 மணிக்கு தலைமைச் செயலகத்துக்கு வழக்கமான பாதுகாப்புகளுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அவருடன், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.பாண்டியராஜன், கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுக்குட்டி ஆகியோர் இருந்தனர். பதவியை ராஜினாமா செய்த பின்னர், காபந்து முதல்வராக சட்டப்பேரவைக்கு வந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதலில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து தலைமைச் செயலக சங்க தலைவர் ஜெ.கணேசன் மற்றும் தலைமைச் செயலக அலுவலர்கள் சங்கத்தலைவர் டி.கபிலன் மற்றும் சங்க நிர்வாகிகளைச் சந்தித்தார்.
அப்போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, 7 வது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது, தலைமைச் செயலகத்தில் நிதித்துறை அதிகாரிகளுக்கு இணையான பதவி உயர்வை மற்ற துறை அதிகாரிகளுக்கும் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முதல் வரிடம் சங்கத்தினர் வைத்தனர். அப்போது, விரைவில் நட வடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்ததாக சங்க வட் டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இறந்த சிறுமி யின் குடும்பத்துக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங் கவும் அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.
தொடர்ந்து பல்வேறு துறை களில் நிலுவையில் இருந்த கோப்பு களை ஆய்வு செய்த முதல்வர் அவற்றில் தற்போதைய அதிகார வரம்புக்குட்பட்ட கோப்புகளின் மீதான முடிவுகளை மட்டும் எடுத்து அவற்றை துறைகளுக்கு அனுப்பி வைத்ததாக தலைமைச் செய லக வட்டாரங்கள் தெரிவித்தன. இரவு 8 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருந்த முதல்வர், அதன்பின் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.