அதிமுக செய்தி தொடர்பாளர்களாக நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட 14 பேரை நியமித்து கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஊடகங்களோடு தொடர்புகொள்ளவும், பேட்டி அளிக்கவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பாளர்களாக 14 பேர் நியமிக்கப்படுவதாக கட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி
1. பொன்னையன் - முன்னாள் அமைச்சர்
2. பண்ருட்டி.ராமச்சந்திரன் - முன்னாள் அமைச்சர்
3. ஆர்.வைத்திலிங்கம் - கழக அமைப்புச் செயலாளர், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
4. பா.வளர்மதி - கழக இலக்கிய அணிச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
5. நாஞ்சில் சம்பத் - தலைமைக் கழகப் பேச்சாளர்
6. டாக்டர் கோ.சமரசம் - தலைமைக் கழகப் பேச்சாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
7. பாலசுப்ரமணியன் - முன்னாள் மத்திய அமைச்சர்
8. டாக்டர் வைகைச்செல்வன் - முன்னாள் அமைச்சர்
9. சி.ஆர். சரஸ்வதி - கழக மகளிர் அணி துணைச் செயலாளர்
10. பேராசிரியர் தீரன் -தலைமைக் கழகப் பேச்சாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
11. கௌரிசங்கர் -சிவகங்கை மாவட்டம்
12. பாண்டியராஜன் - ஆவடி சட்டமன்றத் தொகுதி
13. கோவை செல்வராஜ் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
14. நிர்மலா பெரியசாமி - தலைமைக் கழகப் பேச்சாளர்
ஆகியோர் செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.