தமிழகம்

சித்திரை விழாவில் குவிந்த 850 டன் குப்பை: ஒரே நாளில் அகற்றிய துப்புரவு தொழிலாளர்கள்

செய்திப்பிரிவு

சித்திரைத்திருவிழாவை முன்னிட்டு, மதுரை மாநகராட்சியில் ஒரே நாளில் 850 டன் குப்பைகள் குவிந்தன. நேற்று இவற்றை துப்புரவு தொழிலாளர்கள் அகற்றினர்.

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. 17 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ஒரு நாளைக்கு, மாநகராட்சியில் உள்ள சாலைகள், குடியிருப்புகள், தெருக்களில் 625 டன் குப்பைகள் சேருகின்றன. இவற்றை தினமும் காலை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி உரக்கிடங்கிற்கு கொண்டு செல்ல 3,500 துப்புரவு தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் சித்திரைத்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. கள்ளழகரை பார்க்க, தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சம் பக்தர்கள் திரண்டனர்.

அவர்கள், 9-ம் தேதி மாலை முதல் 10-ம் தேதி மாலை வரை மதுரை நகரத்தெருக்களிலும், வைகை ஆற்று கரையோரப்பகுதிகளிலும் சித்திரைத்திருவிழாவை கொண் டாடினர். பக்தர்களுக்கு நீர் மோர், பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டன. அதனால், வைகை ஆற்றுகரையோரங்கள், நகரப்பகுதிகளில், முக்கிய சாலைகளில் நேற்று காலை மலைபோல் குப்பைகள் குவிந்தன. இந்த குப்பைகளை நேற்று மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்தி உரக்கிடங்கிற்கு கொண்டு சென்றனர். குறிப்பாக வைகை ஆற்றை உள்ளடக்கிய மண்டலம்-2 பகுதிக்குட்பட்ட வார்டுகளில் வழக்கத்தை விட கூடுதலாக 200 டன் குப்பைகள் அதிகமாக சேர்ந்தன.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

சித்திரைத்திருவிழாவில் கள்ள ழகர் ஒவ்வொரு மண்டகப்படிக்கும் சென்றபோது, அந்த இடங்களில் தன்னார்வலர்கள் பிரசாதம் வழங்கினர். பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள், குப்பைகளை, அதற் காக ஒதுக்கப்பட்ட மாநகராட்சி குப்பைதொட்டிகளில் போட வைப்பதற்காகவும், அவர்கள் மாநகராட்சி நடமாடும் கழிப்பறை களை பயன்படுத்தவும் விழிப் புணர்வு ஏற்படுத்த 125 சுகாதார காவலர்கள் கூடு தலாக நியமிக்கப்பட்டனர். அவர் கள் பக்தர்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தியதோடு, மண்டகப்படி களில் சேர்ந்த குப்பைகளை உடனுக்குடன் அப்பகுதியில் தேங்காமல் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதனால், நகரப்பகுதியில் கடந்த காலங்களை போல் அதிகளவு குப்பைகள் தேங்குவது தடுக்கப்பட்டது.

மேலும், பக்தர்கள் குப்பைகளை சாலைகளில் போடுவதை தடுக்க கள்ளழகர் வரும் வழித்தடங்கள், வைகை ஆறு போன்ற இடங்களில் 150 தற்காலிக குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டன. நேற்று முதல் இந்த குப்பைகள் அள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியில் வழக்கமாக 600 முதல் 700 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்படும். நேற்று ஒரே நாளில் 850 டன் வரை குப்பைகள் சேர்ந்தன. இவற்றை அப்புறப்படுத்தி உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. மண்டலம்-2 பகுதிக்குட்பட்ட வார்டுகளில் குவிந்த 200 டன் குப்பைகளை அகற்ற கூடுதலாக அப்பகுதிகளில் 125 துப்புரவு தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பெரும்பாலான கழிவுகள், உணவுகளாகவும், பிரசாத தட்டுகளாகவும் இருந்தன. பிளாஸ்டிக் பிரச்சார விழிப்புணர் வால் அந்த கழிவுகள் பெருமளவு குறைந்துவிட்டன. சித்திரைத் திருவிழாவில் மாநகராட்சியின் திட்டமிட்ட குப்பை பராமரிப்பு வியூகத்தால் இந்த ஆண்டு குப்பைகள், குப்பை தொட்டிகளில் சேகரமானது. வைகை ஆறு பகுதிகளில் மட்டும் திறந்த வெளியில் நள்ளிரவு நேரங்களில் வெளியூர் பக்தர்கள், சரியான விழிப்புணர்வு இல்லாததால் கழிப்பிடம் சென்றுள்ளனர்.

பக்தர்களும் திறந்த வெளியை பெருமளவு திறந்த வெளியை பயன்படுத்துவதும் குறைந்தது. அதனால், இந்த ஆண்டு சித்திரைத்திருவிழா சுகாதாரமாக நடந்து முடிந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT