பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கள் கட்டுவதை தடுக்க தவறிய தமி ழக அரசைக் கண்டித்து வரும் 19-ம் தேதி வேலூரில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே காலை 10 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வும், திமுக முதன்மைச் செயலாளருமான துரைமுருகன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றனர்.
வேலூர், காஞ்சிபுரம், திரு வண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தியில் தெரிவித்து உள்ளது.