தமிழகம்

கிராமப்புறங்களில் 1.77 லட்சம் வீடுகள்: நடப்பு ஆண்டிலேயே கட்டப்படும்

செய்திப்பிரிவு

பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் (ஊரகம்) நடப்பு நிதியாண்டில் 1 லட்சத்து 77 ஆயிரத்து 619 வீடுகள் கட்டப்படும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பட்ஜெட்டில் கூறியுள்ளதாவது: குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி பல்வேறு திட்டங்களின்கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகளை தமிழக அரசு கட்டி முடிக்கும். பிரதம மந்திரி ஊரக வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கிராமப்புற பகுதிகளில் ரூ.3 ஆயிரத்து 95 கோடியே 92 லட்சம் செலவில் 1 லட்சத்து 77 ஆயிரத்து 619 வீடுகள் 2016-2017ல் கட்டப்படும். இதில், மாநில அரசின் பங்கு ரூ.1,908.47 கோடியாகும். மேலும், ரூ.420 கோடி செலவில் சூரிய ஒளி மின்வசதி கொண்ட 20 ஆயிரம் பசுமை வீடுகள் இந்த ஆண்டில் கட்டி முடிக்கப்படும்.

SCROLL FOR NEXT