திருச்சியில் தனியாக வீட்டில் வசித்துவந்த பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டார். திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள பிச்சாண்டார் கோவில் மாருதி நகரைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஜூலியட் மேரி(56). அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.
கணவரை இழந்த இவரது ஒரே மகன் ஜோஸ்வா பெங்களூரில் தனியார் நிறுவனத் தில் பணிபுரிந்து வருகிறார். மாருதி நகரில் ஒரு வீட்டின் மாடியில் தனியாக வசித்து வந்த ஜூலியட் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு தனியார் மருத்துவ மனைக்கு பணிக்கு வராததால் அவருக்கு போன் செய்துள்ளனர்.
ஜூலியட் போனை எடுத்து பேசாததால் மருத்துவமனை பணியாளர் ஒருவர் ஜூலியட்டை அழைத்துவர அவரது வீட்டுக்கு சென்றபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. முகம் முழுவதும் பார்சல் கட்டும் டேப்பால் ஒட்டப்பட்ட நிலையில் கட்டிலில் அசைவற்றுக் கிடந்தார் ஜூலியட்.
உடனே அந்த பணியாளர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அங்குள்ள மருத்துவர் ஒருவருக் கும் டோல்கேட் காவல் நிலைய போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தார். மேரியின் உடலை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை, தடயவி யல் நிபுணர்களும் சென்றனர். மோப்ப நாய் ஜூலியட்டின் வீட்டிலிருந்து புறப்பட்டு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நின்றது. ஜூலியட்டை கொலை செய்த மர்ம நபர்கள் இங்கிருந்து வாகனம் மூலம் தப்பிச் சென்றி ருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஜூலியட்டின் மகன் ஜோஸ்வா பெங்களூரிலிருந்து திருச்சிக்கு வந்த பிறகே அவரது வீட்டில் நகை, பணம் கொள்ளை போய் உள்ளதா என்பது தெரியவரும்.