தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத் தைச் சேர்ந்த கலை விமர்சகரும், தமிழ் இலக்கிய ஆர்வலருமான தேனுகா என்கிற எம்.சீனிவாசன் (64) நேற்று முன்தினம் இரவு காலமானார்.
கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலையில் இசைக்குடும்பத் தில் பிறந்த இவர் நாகஸ்வர பயிற்சியும், இசைப் பயிற்சியும் பெற்றவர்.
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றவர். வண்ணங்கள் வடிவங்கள், பழகத் தெரிய வேணும், லியானார் டோ டாவின்சி, ஓவியர் வான்கா என ஏராளமான தமிழ் நூல்களை எழுதியுள்ளார். பத்துக்கும் மேற்பட்ட நூல்களுக்கு தமிழக அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவருக்கு மனைவி தமிழ்ச் செல்வி, மகன்கள் பார்த்திபன், பூபதி, வித்யாசங்கர் ஆகியோர் உள்ளனர். இறுதிச்சடங்கு இன்று (26-ம் தேதி) பிற்பகல் 3 மணியளவில் கும்பகோணம் அருகே உள்ள அம்மாசத்திரம் பாக்கியலட்சுமி நகரில் நடைபெறவுள்ளது. தொடர்புக்கு: 81979 20030.