தேமுதிகவின் 2-வது வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். கட்சியின் இளைஞரணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ், சேலத்தில் போட்டியிடுகிறார்.
பா.ஜ.க கூட்டணியில் தேமுதிக வுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து கொண் டிருந்தபோதே திருவள்ளூர், வட சென்னை, திருச்சி, மதுரை, நாமக்கல் ஆகிய 5 தொகுதி களுக்கு வேட்பாளர்களை விஜயகாந்த் அறிவித்தார். அதன் பிறகு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து தேமுதிகவுக்கான 14 தொகுதிகளும் அறிவிக்கப் பட்டன.
இதற்கிடையே, நாமக்கல் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட என்.மகேஷ் வரன், உடல்நிலையைக் காரணம் காட்டி தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார்.
இதையடுத்து நாமக்கல் உள்பட மீதமுள்ள 10 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். தேமுதிக இளைஞரணிச் செயலாளரும் உயர்மட்டக்குழு உறுப்பினருமான எல்.கே.சுதீஷ் சேலத்தில் போட்டியிடுகிறார்.
வேட்பாளர்கள் விவரம் வருமாறு:
கள்ளக்குறிச்சி டாக்டர் வி.பி.ஈஸ்வரன் (மருத்துவர் அணிச் செயலாளர்)
திருப்பூர் என்.தினேஷ் குமார் (திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர்)
கரூர் என்.எஸ்.கிருஷ்ணன் (கரூர் மாவட்டச் செயலாளர்)
விழுப்புரம் (தனி) கே.உமா சங்கர் (விழுப்புரம் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர்)
சேலம் எல்.கே.சுதீஷ் (இளைஞரணிச் செயலாளர்)
மத்திய சென்னை பேராசிரி யர் ஜே.கா.ரவீந்திரன்
கடலூர் பேராசிரியர் ஆர்.ராமானுசம் (ஆசிரியர் பட்டதாரி அணி துணைச் செயலாளர்)
திண்டுக்கல் ஏ.கிருஷ்ண மூர்த்தி (திண்டுக்கல் மாவட்டம்)
திருநெல்வேலி எஸ்.சிவனணைந்த பெருமாள் (மகா ராஷ்டிர மாநிலச் செயலாளர்)
நாமக்கல் எஸ்.கே.வேல் (வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர்)
ஏற்கெனவே திருவள்ளூர் - வி.யுவராஜ், வடசென்னை - எம்.சவுந்தரபாண்டியன், மதுரை - டி.சிவமுத்துக்குமார், திருச்சி விஜயகுமார் ஆகியோர் வேட் பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள னர்.
இதேபோல், ஆலந்தூர் சட்ட மன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஏ.எம்.காமராஜ் போட்டியிடுகிறார்.