தமிழகம்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு எதிரான வழக்கு: நாசர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் - நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்குமாறு நடிகர் சங்கத் தலைவர் நாசர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சங்கையா கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:

நான் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினராகவும், துணை நடிகர்களை வேலைக்கு அனுப்பும் ஏஜென்டாகவும் பணியாற்றி வரு கிறேன். நான் உள்பட பலரும் திரைப்படங்களுக்கு துணை நடிகர்களை ஏற்பாடு செய்து தரும் வேலையை செய்து வருகிறோம். நடிகர் சங்க உறுப்பினர்களாக இருப்பவர்களும், இல்லாதவர் களும் இந்த வேலையை செய்து வருகிறார்கள். சமீபத்தில் நடந்த தேர்தலில் நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளனர். அதன்பிறகு துணை நடிகர் ஒருங்கிணைப்பாளர் களுக்கான புதிய விதிமுறைகள் உரு வாக்கப்பட்டது. இந்த நிலையில், நான் நடிகர் சங்கத்துக்கு எதிராகப் பேசியதாக அந்தப் பதவியில் இருந்து என்னை நீக்கி உத்தர விட் டுள்ளனர். என்மீதான குற்றச்சாட்டு கள் உண்மைக்குப் புறம்பானவை. என்னை நீக்கி பிறப்பித்த உத்தர வுக்கு தடை விதிக்க வேண்டும்.

11-வது உதவி சிட்டி சிவில் நீதி மன்ற நீதிபதி டேனியல் ஹரிதாஸ், மனுவுக்குப் பதில் அளிக்கும்படி நடி கர் சங்கத் தலைவர் நாசர் உள்ளிட் டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT