தமிழகம்

தீ விபத்தில் கோயில் கோபுரங்கள் சேதம்: காளையார்கோவிலில் பொதுமக்கள் உண்ணாவிரதம் - அதிமுக பிரமுகர்கள் 2 பேர் கைது

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தீ விபத்தில் கோபுரங்கள் சேதமடைந்ததற்குக் காரணமானவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, அதிமுக- வினர் உட்பட ஆயிரக்கணக்கா னோர் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பிரமுகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

2000 ஆண்டு பழமைவாய்ந்த காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோயில் மருதுபாண்டி யர்களால் புனரமைக்கப்பட்டது. சோமேஸ்வரர்- சௌந்திரநாயகி, சொர்ண காளீஸ்வரர்- சொர்ண வள்ளி, சுந்தரேசுவரர்- மீனாட்சி ஆகிய 3 சிவன்கள் அமைந்துள்ள தலம் இது.

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாக செவ்வாய்க் கிழமை மதியம் தகவல் பரவிய தால், உற்சாகமடைந்த அதிமுக- வினர் கோயில் முன் பட்டாசு, வாணவேடிக்கை வெடித்தனர். அப்போது, ராஜகோபுரம், சிறிய கோபுரம் ஆகியவற்றில் கும்பாபி ஷேகப் பணிகள் மேற்கொள் வதற்காக அமைக்கப்பட்டிருந்த தென்னங்கீற்று கொட்டகை, சாரங்களில் பட்டாசு தீப்பொறி விழுந்து தீப்பற்றியது. இதில், கொட்டகை, சாரங்கள் முழு வதும் எரிந்து சாம்பலாயின. மேலும், கோபுரங்களில் மேற் கொள்ளப்பட்டிருந்த வர்ணப் பூச்சும் சேதமடைந்தது. பல லட்சம் ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த காளையார்கோவில் பொதுமக்கள், பட்டாசு வெடிக்க அதிமுக-வைச் சேர்ந்தவரும் காளையார்கோவில் ஒன்றியக் குழுத் தலைவருமான ஆரோக்கியசாமி, மாவட்ட கவுன்சிலரும், அதிமுக மாவட்ட மகளிரணிச் செயலருமான ஜாக்குலின் ஆகியோர்தான் காரணம் என்று கூறி, அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர்.

போலீஸார் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால், புதன்கிழமை கோயில் முன் நூற்றுக்கணக்கானோர் திரண்டு உண்ணாவிரதம் இருந்தனர். திடீரென ஒரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக காளையார்கோவில் வியாபாரி களும் கடையடைப்பில் ஈடுபட் டனர்.

சட்டப்பேரவை உறுப்பினர் குணசேகரன், சிவகங்கை கோட்டாட்சியர் பிச்சப்பா, வட்டாட்சியர் கங்காதேவி, டிஎஸ்பி மோகன்ராஜ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘ஒன்றியக் குழுத் தலைவர் ஆரோக்கியசாமி, அதிமுக மகளிரணிச் செயலர் ஜாக்குலின் ஆகியோரை கைது செய்யவேண்டும். இனி, கோயில் முன் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் நடத்த தடை விதிக்க வேண்டும். கோயில் கோபுரங் களுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்று பொதுமக்கள் வலியுறுத்தி னர். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து, மறியலை விலக்கிக்கொண்ட பொதுமக்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். ஆரோக்கியசாமி, ஜாக்குலின் ஆகிய இருவரையும் கைது செய்யும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்றனர் அவர்கள்.

இந்த நிலையில், பட்டாசு வெடித்து தீ விபத்துக்கு காரணமாக இருந்ததாக அதிமுக-வைச் சேர்ந்த முத்து மருதுபாண்டி, வீரசேகர் ஆகிய இருவரை காளையார்கோவில் போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT