தமிழகம்

15-வது பேரவையின் முதல் கூட்டத் தொடர்: தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது - ஆளுநர் ரோசய்யா உரையாற்றுகிறார்

செய்திப்பிரிவு

தமிழகத்தின் 15-வது சட்டப் பேர வையின் முதல் கூட்டத் தொடர், இன்று தொடங்குகிறது. பேரவை யில் காலை 11 மணிக்கு ஆளுநர் கே.ரோசய்யா உரையாற்றுகிறார். இதில் பல புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இடம் பெறும் என தெரிகிறது.

தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த மே 16-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் 134 தொகுதிக ளில் வெற்றி பெற்று, அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்தது. 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆளும்கட்சி 2-வது முறையாக ஆட்சியை தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, 6-வது முறையாக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்ர். அவருடன் 32 அமைச்சர்களும் பதவியேற்றனர். தமிழகத்தின் 15- வது சட்டப்பேரவை உரு வானது. சட்டப்பேரவை தற்காலிக தலை வராக எஸ்.செம்மலை பதவியேற் றார். பேரவையின் முதல் கூட்டம் மே 25-ம் தேதி நடந்தது. அன்று முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட 230 பேரும் எம்எல்ஏக்களாக பதவியேற்றனர்.

அதைத் தொடர்ந்து, சட்டப் பே ரவையின் புதிய தலைவராக பி.தனபால், துணைத் தலைவராக பொள்ளாச்சி ஜெயராமன் இருவ ரும் ஒருமனதாக தேர்வு செய்யப் பட்டனர். அவர்கள் இருவரும் ஜூன் 3-ம் தேதி பேரவையில் பதவியேற்றனர்.

இந்நிலையில், 15-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தெ ாடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. முதல் கூட்டம் என்பதால், பேரவையில் ஆளுநர் கே.ரோசய்யா உரையாற்று கி றார். முன்னதாக, பேரவைக்கு வரும் ஆளுநரை பேரவைத் தலைவரும், செயலாளரும் வர வேற்று அழைத்து வருகின்றனர். பேரவைத் தலைவர் இருக் கையில் ஆளுநர் அமர்ந்ததும் அவை நடவடிக்கைகள் தொடங்கும். ஆளுநர் தனது ஆங்கில உரையை வாசிப்பார். அதைத் தொடர்ந்து அதன் தமிழாக்க உரையை பேரவைத் தலைவர் பி.தனபால் அவைக்கு அளிக்கிறார். இத்துடன், இன்றைய பேரவை நிகழ்ச்சிகள் நிறைவுபெறும்.

பின்னர், பேரவைத் தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூடி, கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்று ஆலோசித்து முடிவெடுக் கும். மீண்டும் பேரவை கூடும் நாளில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது 3 அல்லது 4 நாட்கள் விவாதம் நடக்கும் என கூறப்படுகிறது. விவாதத்தின் மீது இறுதியாக எதிர்க்கட்சித் தலைவர் பேசுவார். அதன்பிறகு விவாதத்துக்கு பதி லளித்து முதல்வர் ஜெயலலிதா பேசுவார். அத்துடன் அவை ஒத்தி வைக்கப்பட்டு, நிதிநிலை அறிக்கை தாக்கலுக்காக மீண்டும் கூடும்.

ஒரே ஆண்டில் 2-வது முறை

இந்த ஆண்டில் சட்டப் பே ரவையில் 2-வது முறையாக ஆளுநர் ரோசய்யா உரையாற் றுகிறார். ஆண்டின் தொடக்கத் தில் ஜனவரி 20-ம் தேதி 14-வது சட்டப்பேரவையின் இறுதிக் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றி னார். அதன் மீதான விவாதம் 3 நாட்கள் நடந்தது. தேர்தல் முடிந்து மீண்டும் அதிமுக ஆட்சி அமைத் துள்ள நிலையில், பேரவையில் ஆளுநர் 2-வது முறையாக இன்று உரையாற்றுகிறார். ஆளுநர் உரையில் சில புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இடம் பெறலாம் என தலைமைச் செயலக வட்டா ரங்கள் தெரிவித்தன.

நிதிநிலை அறிக்கை

சட்டப்பேரவை தேர்தல் நடக்க விருந்ததால் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி இடைக்கால நிதிநிலை அறிக் கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். தற்போது தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்துள்ளது. இந்நிலை யில், 2016-17-ம் ஆண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக் கையை பேரவையில் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, நிதிநிலை அறிக்கை தாக்கலுக்காக பேரவை மீண்டும் கூடும்.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கும். அப்போது, டாஸ்மாக் கடைகள் எண்ணிக் கை குறைப்பு, பெண்களுக்கு 50 சதவீத மானியத்துடன் இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்பு களை பேர வையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என தெரிகிறது.

பேரவையில் தற்போது 89 உறுப்பினர்களுடன் வலுவான எதிர்க்கட்சியாக திமுக உள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள் ளார். மேலும் திமுக கூட்டணி கட்சி களான காங்கிரஸுக்கு 8 உறுப் பினர்களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு உறுப் பினரும் உள்ளனர். இம்முறை தேமுதிக, பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, தமாகா உள்ளிட்ட பல கட்சிகள் பேரவையில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT