தமிழகம்

விமானத்தின் கழிவறையில் தங்க பிஸ்கட்டுகள் பதுக்கல்: 5 பேர் கைது

செய்திப்பிரிவு

துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தின் கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 கிலோ தங்க பிஸ்கட்டுகளை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூபாய் 7 கோடி என தெரிகிறது.

துபையில் இருந்து டெல்லிக்கு தங்க பிஸ்கட்டுகள் கடத்தப்படுவதாக தகவல் வந்தது. இதனை அடுத்து விரைந்து செயல்பட்ட மத்திய வருவாய் புலனாய்வு துறையினர், விமானம் சென்னை வந்தவுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில், விமானத்தின் கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 கிலோ தங்க பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்தனர். அதே விமானத்தில் பயணித்த கேரளாவைச் சேர்ந்த முகமது முஸ்தபா என்பவர் துபாயில் இருந்து தங்க பிஸ்கட்டுகளை கொண்டு வந்ததும், டெல்லிக்கு அவற்றை கடத்த இருந்ததும் தெரிய வந்தது.

இந்தக் கடத்தலில் தொடர்புடையதாக கருதப்படும் 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT