தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயி லின் தாக்கம் அதிகமாக உள்ளது. இத னால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். நேற்றும் தமிழகத்தில் 13 நகரங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன் ஹீட்டை விட அதிகமாக கொளுத்தியது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறிய தாவது:
நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவின்படி கரூர் பரமத்தி 107.96 டிகிரி ஃபாரன்ஹீட், திருத்தணி 106.7, வேலூர் மற்றும் திருச்சி தலா 106.16, மதுரை, திருப்பத்தூர், பாளையங்கோட்டை, சேலம், கடலூர் 104, கோவை, நாகை, சென்னை, பரங்கிப்பேட்டை என மொத்தம் 13 நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.