தமிழகம்

கல்விக் கொள்கை எதிர்ப்பைக் கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: ராம கோபாலன் அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதியக் கல்விக் கொள்கையை தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப் பதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் வரும் 14-ம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அந்த அமைப்பின் நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மாறி வரும் காலத்துக்கு ஏற்ப மாணவர்களின் நலன் கருதி கல்வியையும் மாற்றி அமைக்க வேண்டிய தேவை உள்ளது. இதை உணர்ந்தே புதியக் கல்விக் கொள்கையை உருவாக்குவதற் கான பரிந்துரைகளை மத்திய அரசு பல்வேறு தரப்பட்ட மக்களிட ம் இருந்தும், நிபுணர்களிடம் இருந்தும் கேட்டது. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்க முடியாது என்று தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அரசியல் காரணங்களால் இப்படி எதிர்ப்பதை புரிந்து கொள்ளாமல் இருக்க இது 1960 கிடையாது. கேரளம், ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இந்தி 3-வது பாடாமாக உள்ள தால், அங்கு மொழிப்பற்றும் மொழியறிவும் குறைந்திடவில்லை. ஆனால், தமிழகத்தில் ஆங்கிலம் மட்டுமே உள்ள நிலையில், தாய் மொழியறிவு குறைந்து கொண்டே போகிறது. இந்தியும், சமஸ்கிருதமும் அவசியம் என்பதை அம்பேத்கரும், விவேகானந்தரும் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக மாணவர்கள் நாடெங்கும் சென்று பணிபுரிய வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், புதியக் கல்விக் கொள்கையின் அம்சங்களை எதிர்ப்பதை ஏற்க முடியாது. இதுபோன்ற வரட்டுப் பிடிவாதத்தால், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைய வில்லை.

14-ம் தேதி

புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்பவர்களின் உள்நோக்கத்தை மக்களிடம் கொண்டு செல்லவும், காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு பகிரங்க ஆதரவு தரும் தமிழக பயங்கரவாத குழுக்களைக் கண் டித்தும் இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் வரும் 14-ம் தேதியன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு ராம கோபாலன் கூறியுள்ளார்.

          
SCROLL FOR NEXT