தமிழகம்

போலீஸ் விசாரணையில் இளைஞர் உயிரிழப்பு: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

சிந்தாதிரிப்பேட்டை பம்பிங் ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகன் கார்த்திக் (எ) மீன்குழம்பு கார்த்திக்(21). இவரும், இவரது நண்பர்கள் 2 பேரும் ஆட்டோவில் துரைப்பாக்கம் அருகே உள்ள பகுதிக்குச் சென்றுள்ளனர்.

அங்கு பெண் ஒருவரின் கழுத் தில் இருந்த செயினை ஆட்டோவில் சென்றவாறே பறித்ததாக கூறப் படுகிறது. இதைக் கண்ட மளிகைக் கடைக்காரர் சேகர் உள்ளிட்டோர் 3 பேரையும் பிடிக்க முயன்றார்.

அப்போது, 3 பேர் கும்பல், ஆட்டோவில் இருந்து இறங்கி அவரை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. கண்ணகி நகர் போலீஸார் கார்திக்கை பிடித்து விசாரிக்கும் போது அவர் மர்மமான முறையில் இறந்தார்.

இந்நிலையில் அருணாச் சலம்(23), சரத்குமார்(22) ஆகிய 2 பேரை கண்ணகி நகர் போலீஸார் கைது செய்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் சத்தியசீலன் என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருப்பவர்களும், தாக்குதல் நடத்தியவர்களும் இவர்கள்தான் என சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் அடையாளம் காட்டி யுள்ளதாக தெரிகிறது.

ஆட்கொணர்வு மனு தாக்கல்

கண்ணகி நகர் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாசலம் என்ற இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி அவரது தாய் கவிதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘வழிப்பறி வழக்கில் கண்ணகி நகர் போலீஸார் மீன் மார்க்கெட் கார்த்திக் மற்றும் எனது மகன் அருணாச்சலம் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு கூறி கடந்த 19-ம் தேதி அழைத்து சென்றனர். 21-ம் தேதி கார்த்திக் போலீஸாரின் விசாரணையில் இறந்துவிட்டார். அவரை போலீ ஸார் அடித்துக் கொலை செய்திருக் கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.

இந்நிலையில் அவருடன் அழைத்து செல்லப்பட்ட எனது மகன் அருணாச்சலத்தை அன்று முதல் காணவில்லை. கடந்த 3 நாட்களாக சட்ட விரோத காவலில் அடைத்து வைத்துள்ளனர். எனது மகனை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று அதில் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘‘கண்ணகி நகர் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கார்த்திக் என்ற இளைஞர் மரணமடைந்தது தொடர்பாக நாளிதழ்களில் வெளி யான செய்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கை மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.

எனவே, அந்த மரணம் குறித்து விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை கூடுதல் டிஜிபி (புலனாய்வு) 8 வாரங்களில் மாநில மனித உரிமைகள் ஆணையம் முன் பாக தாக்கல் செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT