தேமுதிகவின் கோவை மாநகர் மற்றும் வடக்கு மாவட்டத்துக்கு புதிய பொறுப்பாளர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நியமித்துள்ளார்.
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ''தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கோவை மாநகர் மாவட்ட கழக பொறுப்பாளர்களாக காட்டன்.ஆர்.செந்தில், மற்றும் எஸ்.எம்.பி. முருகன் (மாவட்ட பொருளாளர்) ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
இதே போல் தேமுதிக கோவை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர்களாக ஆர்.பரமசிவம் (மாவட்ட பொருளாளர்), கே.தியாகராஜன் (தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர்) ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, கிளை கழக, நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், தேமுதிக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
முன்னதாக, தேமுதிக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அர.தமிழ்முருகன், தேமுதிக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.பாண்டியன் ஆகியோர் தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நேற்று அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.