ராமேசுவரம் மீனவ சங்கத் தலை வர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று, வரும் 14-ம் தேதி பிர தமர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்வதாக மத்திய இணை அமைச் சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரி வித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப் பட்டத்தைக் கண்டித்து ராமேசுவரம் தங்கச்சிமடத்தில் நேற்று 3-வது நாளாக ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ள பாம்பன் நிரபராதி மீனவர் சங்கத் தலைவர் யு.அருளானந்தம் மற்றும் பிரிட்ஜோவின் குடும்பத்தினரிடம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொலை பேசியில் நேற்று பேசினார்.
நிரந்தர தீர்வு
அப்போது, பிரிட்ஜோவின் தந்தை மற்றும் சகோதரர் உள்ளிட் டோரிடம் ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவித் தார்.
இதுகுறித்து யு.அருளானந்தம் கூறியதாவது: ராமேசுவரம் தீவு மீனவர் சங்கத் தலைவர்களை டெல்லி அழைத்துச் சென்று, மார்ச் 14-ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய் வதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். இதுகுறித்து மீனவ சங்கத் தலை வர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்.
தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இனிமேல் நடக்காத வகையில் இலங்கை அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்றார்.