தமிழகம்

லாரி மோதி 10-ம் வகுப்பு மாணவி பலி: சாலவாக்கம் அருகே தீ வைப்பு, சாலை மறியல்

செய்திப்பிரிவு

சாலவாக்கம் அருகே கல்கு வாரிக்குச் சென்ற லாரி மோதி பள்ளி மாணவி ஒருவர் நேற்று இரவு இறந்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த லாரியையும் சிலர் தீ வைத்து எரித்தனர்.

சித்தாலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நீலகண்டன் மகள் பிரேம லதா(15). இவர் திருமுக்கூடல் பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவரும் இவரது தோழி சாந்தினியும் பள்ளி முடிந்து அங்கேயே தனிப் பயிற்சிக்கு ஒன்று சென்றனர். பின்னர் பிரமேலதாவும், சாந்தினி யும் மோட்டார் சைக்கிளில் சென்ற னர். உறவினர் ஒருவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

இவர்கள் திருமுக்கூடல் பகுதி யில் செல்லும்போது கல்குவாரிக்கு சென்ற லாரி ஒன்று மோதியது. இதில் பிரமேலதா சம்பவ இடத்தி லேயே இறந்தார். சாந்தினி உள்பட இருவர் காயமடைந்தனர். இவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இச் சம்பவத்தை கேள்விப்பட்ட பொதுமக்கள் அங்கிருந்து திரண்டு வந்து லாரிக்கு தீ வைத்து எரித் தனர். பின்னர் திருமுக்கூடல்-சால வாக்கம் சாலையில் சாலை மறிய லில் ஈடுபட்டனர். பின்னர் சால வாக்கம் போலீஸார் பொது மக்களை சமாதானப்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக உரிய நட வடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT