தமிழகம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடிக்கணக்கில் வசூலாகும் மொய் விருந்து ஏற்பாடுகள் தீவிரம்: புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

கே.சுரேஷ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடிக்கணக்கில் வசூலாகும் மொய் விருந்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில், நடப்பு ஆண்டில் விருந்து நடத்துவோருக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் விவசாயப் பகுதி களான வடகாடு, கொத்தமங் கலம், கீரமங்கலம், மாங்காடு, புள்ளான்விடுதி, அணவயல், கீழாத் தூர், குளமங்கலம், சேந்தன்குடி, நெடுவாசல், நகரம், செரியலூர், ஆயிங்குடி, அரசர்குளம் உள் ளிட்ட கிராமங்களில், கடந்த 20 ஆண்டுகளாக ஆடி மாதத்தில் மொய் விருந்து நடத்தப்பட்டு வருகிறது. திருமணம், காதணி போன்ற நிகழ்ச்சிகளின்போது, சிறு தொகையை மொய்யாக எழுதுவார் கள். அதுவே தற்போது மொய் விருந்து என்ற தனி விழாவாக மாறி உள்ளது. அதிகபட்சமாக ரூ.3 கோடி வரை மொய் பணம் கிடைத்து உள்ளது.

கடந்த ஆண்டைப்போலவே, இந்த ஆண்டும் 2 மாதங்களில், சுமார் 100 இடங்களில் 1,500 பேர் மொய் விருந்து நடத்த முன்பதிவு செய்துள்ளனராம். இதன்மூலம் ரூ.100 கோடி வரை வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விழாவுக்கான அழைப்பிதழ், பிளக்ஸ் பேனர் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வரு கிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டு மொய் விருந்து விழா நடத்துவோருக்கு, பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து விழா ஒருங் கிணைப்பாளர்கள் கூறியதாவது:

ஒருவர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் விழா நடத்த வேண்டும் என்பதை மாற்றி, சிலர் 4 ஆண்டுகளில் விழா நடத்துவதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்கும் வகையில், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் மொய் விருந்து நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.

மேலும், உடல் நலத்தைப் பாதிக் கும் அஜினோமோட்டோ, கலப்பட எண்ணெய் மற்றும் வேதிப் பொருட் களை உணவில் சேர்க்கக் கூடாது. உணவு தயாரிப்பு மற்றும் பரிமாறுவதில் சுகாதாரத்தை முறையாகப் பின்பற்ற வேண்டும். எடையை அதிகரிப்பதற்காக இறைச்சிக்காக பயன்படுத்தப்படும் ஆடுகளுக்கு மாத்திரை கொடுப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்றனர்.

வடகாட்டில் வைக்கப்பட்டுள்ள, மொய் விருந்துக்கான பதாகை.

SCROLL FOR NEXT