தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக நிறுவன தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியை மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் நேற்று பார்வையிட்டனர்.
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் 2012 ஜூன் 19-ம் தேதி தொடங்கப்பட்டது. பல்கலைக்கழக தொடக்க நாளை முன்னிட்டு தூத்துக்குடி மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று ‘பொது விஜய நாள்’ கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து
தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள 20 பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரம் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட்டனர்.
ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்
கல்லூரியின் அருங்காட் சியகம், நூலகம், திலேப்பியா மீன் குஞ்சு பொரிப்பகம், கணினி மீன்வளக் கல்விக்கூடம், மீன் பண்ணைகள், அலங்கார மீன்களின் காட்சியமைப்பு, மீன் தீவனத் தயாரிப்பு இயந்திரக்கூடம், மீன்வள உயிரியல் ஆய்வுக்கூடம், கடற்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு கண்காட்சி, ஒலி-ஒளிக்கூடம் போன்றவற்றை மாணவ, மாணவியர் பார்த்து அதிசயித்தனர். மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்தனர்.
தொடக்க விழாவில் ஆட்சியர் ம. ரவிக்குமார் பேசும்போது, ‘தூத்துக்குடி மாவட்டம் நீண்ட கடற்கரையை பெற்று மிகுந்த மீன்வளத்துடன் உள்ளது. எனவே, மீன்வளம் சார்ந்த தொழில்நுட்பங்களை மீன்வள பல்கலைக்கழகம் கண்டறிய வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக் காத வகையில் மீன்வள தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட வேண்டும்’ என்றார் ஆட்சியர்.
மாணவர் சேர்க்கை
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் மணிமாறன் பேசும்போது, ‘தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் தொடங்கப் பட்ட 2012-ம் ஆண்டு முதல் 2015 வரை இரண்டு புதிய கல்லூரிகள் பொன்னேரி மற்றும் நாகப் பட்டினத்தில் தொடங்கப் பட்டுள்ளன. நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள கல்வி நிறுவனம், மீன்வள பொறியியல் கல்வி நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் மீன்வள பொறியியல் படிப்பில் 20 மாணவர்கள் சேர்க்கப்படுவர். மீன்வள பல்கலைக்கழகத்தில் பயின்று வெளிவரும் பட்டதாரி களுக்கு வேலை வாய்ப்புகள் வெகுவாக இருக்கின்றன’ என்றார் அவர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம். ராமகிருஷ் ணன், மீன்வள படிப்பில் மாணவர் களுக்கு உள்ள வாய்ப்புகளை எடுத்துக் கூறினார். மீன்வள விரிவாக்கத்துறை தலைவர் இரா. சாந்தகுமார் நன்றி கூறினார்.