தமிழகம்

டான்செட் பொது நுழைவுத்தேர்வு: ஒரு வாரத்தில் முடிவு வெளியீடு

செய்திப்பிரிவு

எம்பிஏ, எம்சிஏ மற்றும் எம்இ, எம்டெக் உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான டான்செட் எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகத்தால் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான டான்செட் நுழைவுத்தேர்வு ஜுன் 11, 12-ம் தேதிகளில் நடைபெற்றது. எம்பிஏ, எம்சிஏ நுழைவுத்தேர்வு 11-ம் தேதி நடந்தது. இத்தேர்வை 22 ஆயிரம் பேர் எழுதினர். எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான். படிப்புகளுக்கான டான்செட் தேர்வு 12-ம் தேதி நடந்தது. இத்தேர்வை 17 ஆயிரம் பேர் எழுதினார்கள்.

தேர்வு முடிவு குறித்து டான்செட் செயலாளரும், அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் இயக்குநருமான பேராசிரியை பி.மல்லிகாவிடம் கேட்டபோது, “டான்செட் தேர்வு வினாத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தேர்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.

டான்செட் தேர்வெழுதிய மாண வர்கள் வெவ்வேறு படிப்புகளில் சேர தனியாக விண்ணப்பிக்க வேண்டும். அந்த வகையில், எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கு ஜூலை 4 முதல் 15-ம் தேதி வரை ஆன்லைனில் (www.gct.ac.in) விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT