தமிழகம்

கும்பகோணம் அருகே அடகுக் கடையில் ரூ.50 லட்சம் நகை திருட்டு

செய்திப்பிரிவு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அடகுக் கடையின் ஜன்னலை உடைத்து, ரூ.50 லட்சம் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கும்பகோணம் அருகேயுள்ள நரசிங்கன்பேட்டை ரயில்வே சாலையில், 20 ஆண்டுகளுக்கு மேலாக ராஜமார்த்தாண்டன் (45) என்பவர் நகை அடகுக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையின் பின்புறமுள்ள ஜன்னலை உடைத்து, அதன் வழியே உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், இரு லாக்கர்களை உடைத்து 1.5 கிலோ தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.3.5 லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்றுள்ளனர். சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டது நேற்று காலை தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு. தர்மராஜன், திருவிடைமருதூர் டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன், ஆய்வாளர் சுரேஷ்பாபு மற்றும் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். திருநீலக்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT