இந்திய விமானப்படையில் விமானி மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய விமானப் படையில் விமானி, தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பயிற்சி வகுப்புகள் வரும் ஜூலை மாதம் தொடங்கப்படுகிறது. குறுகிய காலப் பணி மற்றும் நிரந்தரப் பணி அடிப்படையில் இந்தப் பயிற்சியில் விண்ணப்பதாரர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் 29-ம் தேதியாகும்.
இதுதொடர்பான விரிவான விளம்பரம் கடந்த 3-ம் தேதி வெளியான எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான தகவல்களை www.careerairforce.nic.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.