இந்தியாவில் பயன்படுத்தப் படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொழில்நுட்பரீதி யாக மிகவும் பாதுகாப்பானவை என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கில் கூறியுள்ள கருத்துகளை மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் கில் கூறியுள்ளதாவது:
1997-ம் ஆண்டு நான் இந்தி யாவின் தலைமை தேர்தல் ஆணை யராக இருந்தபோது வாக்குப் பதிவுக்கான மின்னணு இயந்திரங் களை உருவாக்குமாறு மத்திய அரசு இந்திய மின்னணு நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து பாரத் மின்னணு நிறு வனமும் இந்த முயற்சியில் பங்கேற் றது. ரூ.75 கோடி மதிப்புள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டன.
1997 நவம்பர் தேர்தலில் ராஜஸ் தான், மத்தியப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்டன. இந்தச் சோதனை முயற்சி மகத்தான வெற்றியும் பெற்றது.
எந்தவொரு வாக்குப் பெட்டியும் திருடுபோகவில்லை. வாக்குப் பெட்டிக்குள் (வாக்குச் சீட்டுகளை செல்லாததாக ஆக்குவதற்காக) மை ஊற்றப்படவில்லை. வாக்குகள் எதுவும் வீணாக்கப்படவும் இல்லை. வேகமான வாக்கு எண்ணிக் கையின் விளைவாக மதிய நேரத்துக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகின.
அதற்கு முன்பு வாக்குச் சீட்டுகளை கலைத்துப் போட்டு, மீண்டும் கட்டுகளாகக் கட்டி, அவற்றை எண்ணுவதற்கு ஒரு வாரம் எடுத்துக் கொண்டார்கள். நாட்கணக்கில் அரசு அதிகாரிகள் இந்த வேலைகளில் சிக்கிக் கிடக்க நேரிட்டது. இந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அங்கீ கரிக்கப்பட்ட 52 அரசியல் கட்சிக ளுடனும் ஆலோசனை நடத்தி னோம். அவர்களின் ஆலோசனை களும் கருத்துகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வாக்குப்பதிவு இயந்திரங்களின் தொழில்நுட்பத்தை விருப்பம் போல மாற்றியமைக்க முடியும் என்பது முக்கிய புகாராக இருந்தது. இந்திய மின்னணு நிறுவனம் மற்றும் பாரத் மின்னணு நிறுவனம் ஆகியவற்றின் மேலாண்மை இயக்குநர்கள், பொறியாளர்கள் ஆகியோரை ஒன்றாக அழைத்து புகார் மீதான சந்தேகங்களைப் போக்கினேன்.
இந்தியாவின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மிகக் குறைந்த செலவுடையது. எளிதாகப் பயன்படுத்த வசதியானது. சிறப் பாகச் செயல்படுவதோடு, அவற்றை அவ்வளவு எளிதாக சேதப்படுத்திவிட முடியாது.
வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு தொடர்பான எத் தகைய சந்தேகங்களையும் தேர்தல் ஆணையம் அகற்றும். எல்லாவித சட்டபூர்வமான சவாலையும் தேர்தல் ஆணையம் எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை சந்தேகிக்கும் வகையில், தொழில்நுட்பரீதியில் வலுவான கேள்விகளை யார் எழுப்பினாலும் அவற்றை ஆய்வு செய்வதற்கும் தேர்தல் ஆணையம் தயாராக இருக்கும் என்று கில் கூறியுள்ளார்.