தமிழகம்

தென்னையில் இருந்து மட்டுமே நீரா பானம் இறக்குவதற்கு அனுமதி: ஆயிரக்கணக்கான பனைத் தொழிலாளர்கள், ஈச்ச மரம் வைத்திருப்போர் கடும் அதிருப்தி

டி.செல்வகுமார்

தென்னை, பனை, ஈச்ச மரம் ஆகியவற்றில் இயற்கை பானமான ‘நீரா’ எடுப்பதற்கு முடியும்போது தென்னை மரத்தில் இருந்து மட்டுமே நீரா பானம் இறக்கி பதப்படுத்தி விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்திருப்பது ஆயிரக்கணக்கான பனைத் தொழிலாளர்கள், ஈச்ச மரம் வைத்திருப்போர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தென்னை விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று,

தமிழ்நாட்டில் 10 லட்சத்து 74 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சுமார் 8 கோடி தென்னை மரங் களில் இருந்து நீராபானம் இறக்கி, பதப்படுத்தி விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நீரா என்பது தென்னை மரங்களில் மலராத தென்னம்பாளையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு பானமாகும்.

நொதிக்காத வகையில் உற் பத்தி செய்யப்படும் இந்த பானம், ஆல்கஹால் இல்லாத உடல்நலத் துக்கு பெரிதும் உதவக்கூடிய இயற்கை ஊட்டச்சத்து மிக்க பானமாகும். நீரா பானத்தில் வைட்டமின் ஏ, பி, சி அனைத்தும் ஒருங்கே கிடைப்பதுடன், உடல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் தாது உப்புகளும் நிறைந்து காணப் படுகின்றன. தென்னை வளர்ச்சி வாரியத்தால் கண்டுபிடிக்கப்பட் டுள்ள நொதிப்பு எதிர்ப்புத் திரவத்தை பயன்படுத்துவதால் நீரா பானம் நொதிக்காமல், இயற்கை சுவை மாறாமல் நீண்டநாள் சேமித்து வைத்துப் பயன்படுத்த முடியும்.

தென்னை மரம், பனை மரம், ஈச்ச மரம் ஆகிய மூன்றில் இருந் தும் நீரா பானம் எடுக்க முடியும். ஆனால், தென்னையில் இருந்து மட்டும் நீரா பானம் எடுத்து பதப் படுத்தி விற்பனை செய்ய அரசு அனு மதி அளித்திருப்பது பனைத் தொழி லாளர்கள், ஈச்ச மரம் வைத்திருப் போர் மத்தியில் பெரும் அதிருப் தியை ஏற்படுத்தி உள்ளது.

தென்னை, பனை, ஈச்ச மரத்தில் உள்ள பாளையைச் சீவும்போது கிடைக்கும் சுவையான நீரை கைப் படாமல், காற்றுப்படாமல் பாலி தீன் பையில் சேகரிக்க முடியும். அதை உடனே ஐஸ் பெட்டியில் வைத்து நொதிக்காமல் பார்த்துக் கொள்வதுடன் அதனைப் பதப் படுத்தி நல்ல விலைக்கு விற்கவும் முடியும். அந்த நீரா பானத்தில் இருந்து தயாரிக்கப்படும் சர்க் கரைக்கு (Virgin Sugar) நல்ல வர வேற்பு உள்ளது. இந்த சர்க்கரை கிலோ ரூ.400 வரை விற்கிறது. இந்த மூன்று மரங்களில் இருந்து கிடைக்கும் நீரா பானத்தில் காற்று பட்டு அதில் உள்ள பாக்டீரியா, ஈஸ்ட் கலந்துவிட்டால் அது கள்ளாக மாறிவிடும். அதுவே சுண்ணாம்பு தடவிய கலயத்தில் சுவை நீரை சேகரித்தால் பதநீராகிவிடும். பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை கிலோ ரூ.140 வரைதான் விற்கப்படுகிறது என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கூறியதாவது:

தமிழகத்தில் சுமார் 4 கோடி பனை மரங்களும், 50 லட்சம் ஈச்ச மரங்களும் உள்ளன. இலங்கையில் தயாரிக்கப்படும் நீரா பானம் 2 ஆண்டுகள் வரையிலும், கேரளா வில் தயாராகும் நீரா பானம் 2 மாதங்கள் வரையிலும் கெட்டுப் போகாமல் இருக்கும் என்று விளம் பரம் செய்யப்படுகிறது. கேரளா வில் பாலதீன் பைகளுடன்கூடிய ஐஸ் பெட்டியை மரத்தின் மேலே எடுத்துச் சென்று பாளையில் இருந்து வரும் நீரா பானத்தை எடுக் கின்றனர். பின்னர் குளிரூட்டப்பட்ட வேனில் தொழிற்சாலைக்கு எடுத் துச் சென்று டின்களில் அடைத்து விற்கின்றனர். மேலும் நீரா பானத்தில் இருந்து தேன், சர்க்கரை, சாக்லேட் போன்றவற்றையும் தயா ரித்து விற்கிறார்கள். மேற்கு ஆப் பிரிக்காவில் உள்ள கானா நாட்டில் நீரா பானம் சேகரிக்க ஆணுறை யைப் பயன்படுத்துகின்றனர் என்றார்.

SCROLL FOR NEXT