தமிழகம்

சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பித்த எஸ்எஸ்எல்சி தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

செய்திப்பிரிவு

அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மார்ச் மாதம் நடைபெறவுள்ள எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் கடந்த 16 மற்றும் 17-ம் தேதியில் ஆன்லைனில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை 23-ம் தேதி (இன்று வியாழக்கிழமை) முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு அரசு தேர்வுத் துறையின் இணைதளத்துக்குள் (>www.dge.tn.gov.in) சென்று “ஹால் டிக்கெட் டவுன்லோடு” என்ற பகுதியை கிளிக் செய்து அதில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT