தமிழகம்

பெட்ரோல் டீலர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசலுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்யும் முடிவைக் கண்டித்து நாளை முதல் மேற்கொள்ளவிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை பெட் ரோல் பங்க்கு உரிமையாளர்கள் விலக்கிக் கொண்டனர்.

மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கு சர்வதேச நாடுகளில் மேற்கொள்வதைப் போன்று தினசரி விலை நிர்ணயம் செய்யப் போவதாக அறிவித்தது. இதன்படி, முதற்கட்டமாக புதுச்சேரி, விசாகப்பட்டினம், சண்டீகர், ஜாம்ஷெட்பூர் மற்றும் உதய்பூர் ஆகிய 5 நகரங்களில் சோதனை அடிப்படையில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதில் வெற்றி கிடைத்ததையடுத்து இத்திட்டத்தை நாளை (16-ம் தேதி) முதல் நாடு முழுவதும் விரிவு படுத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்தது.

இதற்கு பெட்ரோல் பங்க்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். மத்திய அரசின் இந்த விலை நிர்ணயக் கொள்கையைக் கண்டித்து நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு படப்போவதாக அறிவித்தன.

இந்நிலையில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதானை அகில இந்திய பெட்ரோலியம் டீலர்கள் கூட்டமைப்பின் தலைவர் பிரபாகர் ரெட்டி சந்தித்துப் பேசினார்.

இப்பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டதையடுத்து நாளை முதல் மேற்கொள்ள இருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து, பிரபாகர் ரெட்டி கூறும்போது, “பெட்ரோல், டீசலுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக எங்களுக்கு எழுந்த சந்தேகங்களை அமைச்சர் தீர்த்து வைத்தார். இதையடுத்து எங்கள் வேலை நிறுத்தப் போராட் டத்தை விலக்கிக் கொண்டோம்” என்றார்.

தினசரி நிர்ணயிக்கப்படும் விலை காலை 6 மணி முதல் அமல் படுத்தப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT