தமிழகம்

குழந்தை தொழிலாளர்களாக உள்ள 1.50 லட்சம் பேரை மீட்டு கல்வி வழங்க வேண்டும்: அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 1.50 லட்சம் குழந்தை தொழி லாளர்கள் உள்ளனர். அவர்களை தொழிலில் இருந்து மீட்டு கல்வி யாளர்களாக ஆக்க வேண்டும் என்று தமிழக நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

மாநில அளவிலான குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வுக் கூட்டம் சென் னையில் நேற்று நடந்தது. இதில், குழந்தை தொழிலாளர் சிறப்பு பயிற்சி மையங்களில் படித்து 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. பரிசுகளை தமிழக நிதிய மைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கி னார். அவர் பேசியதாவது:

தமிழகத்தில் குழந்தை தொழி லாளர் முறை ஒழிப்புத் திட்டத்தை அதிகாரிகள் சிறப்பாக செயல் படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 1.50 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களையும் தொழி லில் இருந்து மீட்டு கல்வியாளர் களாக ஆக்க முயற்சி எடுக்கப் படுகிறது.

பள்ளி செல்லாக் குழந்தைகள் தமிழகத்தில் 3,127 பேர் மட்டும் உள்ளனர். அவர்களுக்கு வேண்டிய வசதிகள் வாய்ப்புகள் அளிக்கப் பட்டு வருகின்றன. அவர்கள் கல்வி பெறவேண்டும் என்பதற்காக 16 வகையான பொருட்கள் வழங் கப்படுகின்றன. பெற்றோர் அவர் களை லட்சியத்துடன் வளர்த்தால், கல்வியறிவு பெற்றவர்களாக ஆக்க முடியும். பெற்றோரின் பங்கு இதில் மிகவும் முக்கியம். பிள்ளை களை பெற்றோரும், ஆசிரியர்களும் ஊக்குவிக்க வேண்டும். ஆசிரி யர்கள் நேச உணர்வோடு மாண வர்களுக்கு பாடங்களைக் கற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதலில் சிறப்பாக பணியாற்றிய வர்களுக்கு விருதுகள் வழங்கிய ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் பேசும்போது, ’’தமிழக அரசு மேற்கொண்டு வந்த நலத்திட்டங்களால் மாநிலத்தில் குழந்தைகள் தொழிலாளர் எண் ணிக்கை குறைந்துள்ளது. மிக விரைவில் குழந்தைகள் தொழி லாளர் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும்’’ என்றார்.

இளம் சாதனையாளர்களுக்கு பரிசுகள் வழங்கிய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் பேசும்போது, ‘‘கடந்த 6 ஆண்டுகளில் மட்டும், குழந்தை தொழி லாளர்கள் தொடர்பாக 8 லட்சத்து 55 ஆயிரத்து 186 ஆய்வுகள் நடத்தப்பட்டு 146 வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளன. இதில் 114 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டு, ரூ.11 லட்சத்து 63 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில்15 மாவட்டங்களில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில் சிறப்பு பயிற்சி மையங் கள் செயல்படுகின்றன. 322 சிறப்பு பயிற்சி மையங்களில் 8,151 மாணவர்கள் படிக்கின்றனர். தேசிய தொழிலாளர் திட்டங்கள் மூலம் 1 லட்சத்து 4 ஆயிரத்து 962 பேர் முறை யான பள்ளிகளில் சேர்க்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.

நிகழ்ச்சியில், மத்திய சென்னை எம்.பி., எஸ்.ஆர்.விஜயகுமார், தொழிலாளர் நலத்துறை செயலர் பி.அமுதா, ஆணையர் கா.பாலச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் வி.அன்புச்செல்வன், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கு நர் கு.காளியண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT