தமிழகம்

‘மெட்ரோ’ பணியின்போது பூமியில் இருந்து பொங்கிய சேறு

செய்திப்பிரிவு

சென்னை சென்ட்ரல் முதல் ஆலந் தூர் வரையிலான மெட்ரோ ரயில் பணி, நிர்வாக காரணங்களால் கடந்த 15 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளாசா அருகே ஸ்மித் சாலை இணையும் இடத்தில் நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென பூமிக்கு அடியில் இருந்து குழம்பாக சேறு பொங்கியது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் அண்ணா சாலை, ஒயிட்ஸ் சாலை யில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராயப்பேட்டை, ஜெமினி பாலம் வழியாக, எல்ஐசி நோக்கிச் சென்ற வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாயினர்.

SCROLL FOR NEXT