தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டால் புரட்சி வெடிக் கும் என திமுக மகளிர் அணி செய லாளர் கனிமொழி எம்பி எச்சரித் துள்ளார்.
புதுக்கோட்டையில் திமுக சார் பில், மத்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் ‘நீட்’ தேர்வு எதிர்ப்பு குறித்து நேற்று நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
தமிழில் படித்தவர்கள் உலக அளவில் முக்கிய பதவிகளில் உள்ளனர். தமிழ் மொழியைப் பாதுகாக்க பலர் உயிர்த் தியாகம் செய்த மாநிலம் தமிழ்நாடு.
எனவே, தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சித்தால் புரட்சி வெடிக்கும். தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்கூட, மருத்துவர்களாவதற்கு திமுக கொண்டுவந்த இட ஒதுக்கீடுதான் காரணம்.
தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வு அவசியமற்றது. தமிழகத்தில் கல்வி, உணவு, உடை, மொழி, கலாச்சாரம் உள்ளிட்டவற்றில் ஒருவிதமான திணிப்பை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. இதை தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள் என்றார்.