கட்சி விவகாரங்கள் குறித்து ஊடகங்களில் பேசியது தொடர்பாக விளக்கம் கேட்டு திமுக எம்.பி. ரித்தீஷுக்கு தலைமை நோட் டீஸ் அனுப்பியது. அதற்கு உடனடியாக விளக்கம் கொடுத்திருக்கிறார் ஜே.கே.ரித்தீஷ்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக உட்கட்சித் தேர்தல்கள் முறையாக நடக்கவில்லை என்று குற்றம் சாட்டிய ரித்தீஷ், ’இதுகுறித்து தலைமைக்கு புகார் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எங்களுக்காக நியாயம் கேட்ட அழகிரியையும் கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்கள். கட்சியின் ஆரோக்கியம் கருதி உரிய நடவடிக்கை எடுத்தால் கட்சிக்கு நல்லது. இல்லாவிட்டால் அதிமுக-வுக்குத்தான் சாதகமாகிவிடும்’ என்று செய்தி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் கட்சி விவகாரங்களை ஊடகங்களில் விவாதித்ததற்கு விளக்கம் கேட்டு நேற்று முன்தினம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது திமுக தலைமை. அதற்கு நேற்றே ரித்தீஷ் விளக்கம் கொடுத்திருக்கிறார். அந்த விளக்கத்தின் சாராம்சம்: நான் எந்தச் சூழலிலும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறவில்லை. எனது மாவட்டத்தில் உட்கட்சித் தேர்தல் முறையாக நடக்கவில்லை என்பதை 10 தடவைக்கு மேல் தங்களிடம் புகார் தெரிவித்திருந்தேன். அந்த உண்மையைத்தான் பத்திரிகைகளில் பதிவு செய்திருந்
தேன். மற்றபடி தலைவரையோ, கட்சியையோ நான் விமர்சிக்க
வில்லை.
ராமநாதபுரத்தில் 70 ஆயிரம் பேரை நான் கட்சியில் சேர்த் திருக்கிறேன். தங்கவேலன் என்ற தனிப்பட்ட நபருக்காக அவர்கள் அத்தனைபேரையும் ஒதுக்கிவைப்பது எந்த விதத்தில் நியாயம்? இவ்வளவு பேரை ஒதுக்கி வைத்தால் எப்படி தேர்தலில் வேலை பார்ப்பார்கள்; திமுக எப்படி வெற்றிபெறும்? இதையெல்லாம் திமுக எம்.பி. என்ற முறையில் நான் தங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்திருந்தேன். அந்த உண்மைகளைத்தான் பத்திரிகைகளில் சொன் னேன். நான் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இருந்தாலும், தலைவர் மனம் வருத்தப்படும் படியாக நான் நடந்திருந்தால் அதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’ இவ்வாறு தனது விளக்கத்தில் தெரிவித்திருக்கிறார் ரித்தீஷ்.