தமிழகம்

மக்கள் விரும்பும் ஆட்சி தமிழகத்தில் இல்லை: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தமிழக அரசு மக்கள் விரும் பக்கூடிய ஆட்சியாக இல்லை என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் என்.பெரியசாமியின் இல்லத் துக்கு நேற்று மதியம் வந்த ஜி.கே.வாசன், அங்கு அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, அவரது குடும்பத் தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர் களிடம் ஜி.கே.வாசன் கூறிய தாவது: தமிழக அரசின் இன்றைய அரசியல் சூழல், ஆட்சியாளர்கள் செயல்பாடு, சட்டப்பேரவை நடவடிக்கைகள் போன்றவற்றை கவனத்தில் கொண்டு, தமிழகத்துக்கு முழுநேர ஆளுநரை, மத்திய அரசு உடனே நியமிக்க வேண்டும்.

தமிழக அரசு மக்கள் விரும் பக்கூடிய அரசாக செயல்பட வில்லை. தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண் டும். அப்போதுதான் சட்டம் ஒழுங்கை இந்த அரசால் நிலைநாட்ட முடியும்.

தமிழக விவசாயிகளின் கடன்கள் முழுவதையும் மத் திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண் டும். இல்லையெனில் விவ சாயிகளுக்கு துரோகம் செய்த அரசுகளாகிவிடும்.

ஏற்கெனவே கிடப்பில் உள்ள சேது சமுத்திரம் திட் டத்தை உடனடியாக செயல் படுத்த தொடங்கி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கக் கூடிய உறுதியான நிலையை மத்திய அரசு எடுக்க வேண் டும் என்றார் வாசன்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்போதுதான் சட்டம் ஒழுங்கை இந்த அரசால் நிலைநாட்ட முடியும்.

SCROLL FOR NEXT