தமிழகம்

பேரவையில் 22-ம் தேதி கேள்வி நேரம் கிடையாது

செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில் முதல் ஒரு மணி நேரம் கேள்வி - பதில் நேரமாகும். தொகுதி சம்பந்தப்பட்ட முக்கியப் பிரச்சினைகளை இந்த நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்புவது வழக்கம். அதற்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதிலளிப்பார்கள்.

வரும் 22-ம் தேதி பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள் ளது. அதற்கு காவல்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்க உள்ளார்.

இந்நிலையில், 22-ம் தேதி பேரவையில் கேள்வி நேரம் இருக்காது என பேரவைத் தலைவர் பி.தனபால் நேற்று அறிவித்தார். இதற்காக அவை முன்னவரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. எனவே, 22-ம் தேதி காலை 10 மணிக்கு பேரவை தொடங்கியதும் காவல் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறும்.

SCROLL FOR NEXT