தமிழகம்

புத்தாண்டுக்குத் தயாராகும் சென்னை நட்சத்திர ஓட்டல்கள்

வி.சாரதா

புத்தாண்டு தின கொண்டாட் டங்களுக்காக மெரினா கடற்கரைக்கு ஆயிரக் கணக்கானவர்கள் செல்லும் நிலையில், மற்றொரு தரப்பினர் நட்சத்திர ஓட்டல்களுக்கு படை யெடுப்பார்கள். அப்படி படையெடுப்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களும் தயாராகி வருகின்றன.

சென்னையில் முதல் முறையாக புத்தாண்டை கொண்டாடும், கிண்டியில் உள்ள ஐ.டி.சி.கிராண்ட் சோழா ஓட்டலில் 31ம் தேதி இரவு ஆசியாவின் பல வித உணவு வகைகளும், களி மண் சட்டிகளில் தயாரித்த வட இந்திய உணவு வகைகளும் விருந்துக்கு வைக்கப்படவுள்ளன. அது தவிர மெட்ராஸ் பெவிலியன் என்று அழைக்கப்படும் உணவறையில் பல ருசியான உணவுகளும் பானங்களும் கிடைக்கும்.

மேலும் டிசம்பர் 16-ம் தேதி முதல் ஜனவரி 13-ம் தேதி வரை குடும்பத்துடன் கிராண்ட் சோழாவில் தங்க நினைப்பவர்களுக்கு ‘ராஜ ராஜ சோழ அனுபவம்’, ‘கரிகாலன் அனுபவம்’ உள்ளிட்ட பல ஹாலிடே பாக்கேஜ்களும் காத்திருக்கின்றன.

அதே போன்று முதல் முறை யாக புத்தாண்டு கொண்டாடும் லீலா பேலஸ் ஓட்டலில் இந்திய உணவு வகைகளும், சீன உணவு வகைகளும் வழங்கப்படுகின்றன. கத்திப்பாராவில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில், ‘சிலண்ட்ரோ’ அறை இந்த வருடம் வெள்ளை நிறத்தில் அலங்கரிக்கப்படும். இங்கு காலா டின்னருடன் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

SCROLL FOR NEXT