விவசாயத்தின் முக்கியத்துவத்தை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஒன்றின் ஆசிரியர்கள், பள்ளி வளாகத்திலேயே தோட்டம் அமைத்து மாணவர்களுக்கு கல்வியோடு விவசாயத் தையும் கற்றுத் தருகின்றனர்.
வேளாண் சமூகமான இந்தியா தற்போது நகரமயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கத்தால் தனது பாரம் பரிய விவசாய தொழில்நுட்பங்களை இழந்து வருகிறது. விவசாயம் மற்றும் அதன் பாரம்பரியத்தை பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது இக்காலத்தில் மிகவும் அவசிய மானதாக உணரப்பட்டு வருகிறது. இளைய தலைமுறைக்கு நமது பாரம்பரிய விவசாயத்தைப் பயிற்றுவிக்கும் நோக்கில், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அரசுப் பள்ளி வளாகத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகின்றனர் ஆசிரியர்கள்.
இதுகுறித்து அந்த பள்ளியின் ஆசிரியர்கள் கூறும்போது, “பள்ளி மாணவர்களுக்கு கல்வியோடு, விவ சாயத்தையும் கற்றுத் தர வேண்டும் என முடிவு செய்தோம். இதற்காக, பள்ளி வளாகத்தில் உள்ள 17 சென்ட் இடத்தை ஒதுக்கினோம். அங்கு இயற்கை முறையில் முள்ளங்கி, கீரை, வெண்டைக்காய், பூசணிக் காய், அவரை, தக்காளி, நிலக் கடலை உள்ளிட்ட பயிர் வகை களைப் பயிரிட்டோம். வேலூர் மாவட்டத்திலேயே முதன்முறை யாக அரசுப் பள்ளி வளாகத்திலேயே விவசாயத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத் துள்ளோம்.
இங்கு சாகுபடி செய்யப்படும் பயிர் வகைகள், காய்கறிகளைச் சத்துணவுத் திட்டத்துக்கு பயன்படுத்தி வருகிறோம். இதன்மூலம் இயற்கை முறையில் பயிரிடப்பட்டு சத்து மிகுந்த காய்கறிகளை எங்கள் மாணவர்களுக்கு வழங்க முடிகிறது. சில நேரங்களில் கிடைத்தால், அருகேயுள்ள அரசுப் பள்ளிகளின் மாணவர்களுக்கும் வழங்குகிறோம்.
மாணவர்களுக்கு கல்வியோடு விவசாயத்தையும் சேர்த்து கற்றுத் தர திட்டமிட்டதால் இதை சாதிக்க முடிந்தது. மாணவர்களும் மிக ஆர்வத்தோடு விவசாயத்தை கற்கின்றனர். இதேபோல், மற்ற அரசு பள்ளிகளும் தங்கள் பள்ளி வளாகத்தில் இயற்கைத் தோட் டத்தை அமைத்து, மாணவர்களுக்கு விவசாயத்தின் அவசியத்தை கற்றுத் தர வேண்டும்.
இதன்மூலம் எதிர்கால தலைமுறைக்கு விவசாயத்தை காக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்த முடியும். இது தொடர்பாக மற்ற பள்ளி ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்” என்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் இந்த தன்னார்வ செயல்பாடு பள்ளி மாணவர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜோலார்பேட்டை அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோட்டம்.