தமிழகம்

சென்னை கலங்கரை விளக்கம் அருகே வழக்கறிஞர் மீது சரமாரி தாக்குதல்

செய்திப்பிரிவு

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் கலங்கரை விளக்கம் அருகே அரிவாளால் வெட்டப்பட்டார்.

ராயப்பேட்டை, லாயிட்ஸ் ரோடு, மெகாபுரத்தைச் சேர்ந்தவர் கேசவன் (41). உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவ ரது மகள் கலங்கரை விளக்கம் அருகே உள்ள பள்ளி ஒன்றில் படித்து வரு கிறார். கேசவன் தனது மகளை தினமும் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.

அதன்படி, நேற்று காலை 8.30 மணிக்கு வழக்கம்போல் மகளை பள்ளியில் விட்டு விட்டு கலங்கரை விளக்கம் அருகே உள்ள ரயில் நிலையம் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, அவரது மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மோதினர். இதில், தடுமாறி கீழே விழுந்த கேசவனை மறைந்திருந்த 5 பேர் கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.

ரத்தம் கொட்டிய நிலையில் உயி ருக்கு போராடிய அவரை மெரினா போலீஸார் மீட்டு சிகிச்சைக்காக ராயப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக் காக தற்போது ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் கேசவன் சேர்க்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் குறித்து மெரினா போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். போலீஸாரின் முதல் கட்ட விசா ரணையில் கேசவன் வெட்டப்படும் காட்சிகள் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. அதன் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியை போலீஸார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

SCROLL FOR NEXT