தமிழகம்

மக்கள் நலக் கூட்டணி இன்னும் வலுப்பெறும்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நம்பிக்கை

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், திருப்பத் தூரில் வைகோ நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

மதிமுகவைப் பொறுத்த வரையில் இந்தத் தேர்தல் ஜனநாய கத்தின் தீர்ப்பாக அமையவில்லை. பணநாயகத்தின் தீர்ப்பாக அமைந் தது. இதுபோன்ற ஒரு நிலைமை தமிழ்நாட்டில் இதுவரை ஏற்பட்ட தில்லை. ஆளுகின்ற கட்சியும், ஆண்ட கட்சியும் ஒரு ஒப்பந்தம் பேசிக்கொண்டு தெருக்கள் வாரி யாக பிரித்து பணத்தை வழங்கினர்.

கட்சித் தொண்டர்கள் மிகவும் உறுதியாகவும், முன்பைவிட இன்னும் வேகமாகவும் செயல்படு கின்றனர். இயக்கத்துக்கு எந்தவித சேதாரமும் இல்லை. மக்கள் நலக் கூட்டணி நல்ல தொடக்கம். அது தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கிற சக்தியாக மேலும் வலுப்பெறும். நடைபெறப்போகும் 3 தொகுதிகளுக்கான தேர்தல் களிலும் நாங்கள் மிகவும் கடுமை யாக உழைக்கத் தீர்மானித்திருக் கிறோம்.

திமுக ஆட்சியிலும் அதிமுக ஆட்சியிலும் படுகொலைகள் தொடர்கின்றன. திமுக ஆட்சி யிலும், அதிமுக ஆட்சியிலும் ஊழல்தான் இன்றைய நிலைமை. அரசின் மீது மக்கள் நம்பகத்தன்மையை இழக்கும் நிலை உள்ளது என்றார்.

SCROLL FOR NEXT