தமிழகம்

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகள் தீவிரம்

செய்திப்பிரிவு

டெல்லி ரயில் நிலையத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள் ளதை தொடர்ந்து, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங் களில் பாதுகாப்பு மற்றும் கண் காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

டெல்லி ரயில் நிலையத்துக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், டெல்லி - கான்பூர் ரயிலை வெடிகுண்டு வைத்து, தகர்க்கப்போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, டெல்லி ரயில் நிலையத்தில் கடந்த 2 நாட்களாக பாதுகாப்பு, சோதனை பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தவிர, நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

சென்னையில் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் ரயில்வே பாது காப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட் டனர். பயணிகள் முழுமையான சோதனைக்குப் பின்னரே, உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பயணிகளின் உடைமைகளும் முழுமையாக சோதிக்கப்பட்டன. ரயில் நிலையத்தை சுற்றிலும் ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்கத்தை விட அதிகளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக ரயில்வே போலீஸ் மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்’’என்றனர்.

SCROLL FOR NEXT