தமிழகம்

ஜிஎஸ்டி வரியை குறைக்க வலியுறுத்தி வரும் 30-ம் தேதி முதல் பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தம்

செய்திப்பிரிவு

ஆடம்பரப் பொருட்கள் பட்டியலில் இருந்து பட்டாசை நீக்கி அதற்கான வரியை 28 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகக் குறைக்க வலியுறுத்தி சிவகாசியில் அனைத்து பட்டாசு ஆலைகளும் வரும் 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத் தத்தில் ஈடுபட உள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு-இந்திய பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆசைத்தம்பி, பொதுச் செயலர் மாரியப்பன், இந்திய பட்டாசு உற்பத்தியாளர் சங்கச் செயலர் வெங்கடேஷ், நிர்வாகி கண்ணன், முன்னாள் தலைவர் அர்ஜூன்ராஜா ஆகியோர் சிவகாசியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

உலக அளவில் பட்டாசு உற்பத்தி யில் சீனா முதல் இடத்தையும், இந்தியா இரண்டாவது இடத்தை யும் வகிக்கிறது. பட்டாசுக்கு 28 சத வீதம் ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்கப் பட்டுள்ளது. பட்டாசுக்கு ஏற் கெனவே செலுத்திவரும் மத்திய கலால் வரி 12.5 சதவீதம், மாநில வரி 14.5 சதவீதம் மற்றும் சேவை வரி சேர்த்தே 28 சதவீதம் என ஜிஎஸ்டி குழு கூறுகிறது.

நாட்டில் சுமார் 1,200 பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில் 51 ஆலைகள் மட்டுமே மத்திய கலால் வரி, மாநில வரி கட்டுகின்றன. மீதம் உள்ள 1,150 ஆலைகள் 14.5 சதவீத மாநில வரி மட்டுமே செலுத்துகின்றன. கலால் வரி கிடையாது.

மின்சாரம், இயந்திரம் எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க மனி தர்களைக் கொண்டு மேற்கொள் ளப்படும் தொழில் என்பதால் தீப் பெட்டிக்கு 5 சதவீத வரி விதிக்கப் பட்டுள்ளது. இதைப்போல பட்டாசுக்கும் 5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்பட வேண்டும். பட்டாசு அடக்க விலையில் 30 சதவீதம் மட்டுமே மூலப்பொருள் மற்றும் சேவைகளின் பங்கு என்பதால் உள்ளீட்டு வரி வரவு 4 சதவீதம் மட்டுமே கிடைக்கும்.

மேலும், பட்டாசு என்பது ஆடம் பரப் பொருள் அல்ல. பண்டிகைகள், திருமணம், திருவிழாக்கள் போன்ற அனைத்து விழாக்களிலும் அனைத்து தரப்பினரும் பட்டாசு வெடித்துக் கொண்டாடும்போது அதை ஆடம்பரப் பொருள் என வகைப்படுத்தி 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது முற்றிலும் தவறு. இந்த வரி விதிப்பால் பட்டாசு விலை அதிகரிக்கும். இது ஜிஎஸ்டி கொள்கைக்கு எதிரானது.

பட்டாசுக்கான வரி மிக அதிக அளவில் நிர்ணயிக்கப்பட் டுள்ளதால் இத்தொழில் தானாகவே முடங்கும் நிலை ஏற்படும். எனவே ஆடம்பரப் பொருட்கள் பட்டியலில் இருந்து பட்டாசை நீக்கி அதற்கான வரியை 28 சதவீதத்திலிருந்து 5 அல்லது 12 சதவீதமாகக் குறைக்க வலியுறுத்தி சிவகாசியில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளும் வரும் 30-ம் தேதி முதல் காலவரையின்றி வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்.

இதுகுறித்து ஜிஎஸ்டி குழுவிடம் மத்திய அரசு வலியுறுத்தி பட்டாசுக் கான வரி விதிப்பைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT