தமிழகம்

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் பிடிபட்ட கப்பல் மீது வழக்கு பதிவு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி கடற்பகுதியில்,ஆயுதங்களுடன் பிடிபட்ட அமெரிக்க வணிகக் கப்பல் மீது ஆயுத தடுப்பு பிரிவின் கீழ் இந்திய கடலோர காவல்படை வழக்கு பதிவு செய்துள்ளது.

தூத்துக்குடி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் உலா வந்த கப்பலை, இந்திய கடலோரக் காவல்படையினர் கடந்த சனிக்கிழமையன்று மடக்கிப்பிடித்தனர்.

Seaman Guard Ohio என்ற அந்த கப்பலில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்ததைத் தொடர்ந்து கப்பலை இந்திய கடலோர காவல்படையினர் சிறைபிடித்தனர்.

இந்நிலையில், சிறைப்பிடிக்கப்பட்ட கப்பல் ஊழியர்கள் 25 பேர் மீதும் இன்று ஆயுத தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT